Legend Saravanan: மாணவர்கள் மத்தியில் லெஜண்ட் சரவணன் அதிரடி! கல்லூரி திறப்பு விழாவை திருவிழாவாக மாற்றிய லீடர்

சென்னை: விளம்பரங்கள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர், 'தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக தடம் பதித்தவர் லெஜண்ட் சரவணன். சமூக வலைதளங்களில் இவரது போஸ்ட் வந்தாலே அது வைரலாவது வழக்கம். அது ஒருபுறம் இருக்க, இவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் செம ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில் சென்னை நெடுங்குன்றத்தில் நடந்த ஒரு நிகழ்வில், மாணவர்கள் மத்தியில் இவர் கொடுத்த என்ட்ரி அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாகவே லெஜண்ட் சரவணன் எங்கு சென்றாலும் அந்த இடம் திருவிழா கோலம் பூண்டுவிடும். தற்போது சென்னை நெற்குன்றத்தில் அமைந்துள்ள நெல்லை நாடார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக லெஜண்ட் சரவணன் கலந்து கொண்டு கல்லூரியைத் திறந்து வைத்தார். அவர் வருகை தருகிறார் என்றதுமே ரசிகர்கள் மற்றும் மாணவர்கள் படைசூழ அந்த இடமே ஸ்தம்பித்தது.

The Leader Legend Saravanan Turns College Inauguration into a Mega Festival Rocks Among Students

கல்லூரி திறப்பு விழா: தி லெஜண்ட் பட ஸ்டைலில் கோட் சூட் அணிந்து மாஸாக வந்த இவரைப் பார்த்த மாணவர்கள், உற்சாகத்தில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் லெஜண்ட் லெஜண்ட் என்று கத்தி ஆரவாரம் செய்தனர். வெறும் திறப்பு விழா நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், மாணவர்களுடன் கலந்துரையாடி அந்த இடத்தையே கலகலப்பாக மாற்றினார் சரவணன். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

மாணவர்கள்: இவரது இந்த மாஸ் என்ட்ரியைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், "லெஜண்ட் அண்ணன் இறங்குனா அந்த இடமே வேற லெவல் தான்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ, "மாணவர்கள் மத்தியில் இவருக்கு இவ்வளவு கிரேஸ் இருக்கிறதா?" என்று வியந்து கமெண்ட் போட்டுள்ளார். ஒரு சிலர், "அடுத்த பட அப்டேட் எப்போது வரும்?" என்று இப்போதே கேள்விகளை அடுக்கத் தொடங்கிவிட்டனர்.

லீடர்: லெஜண்ட் சரவணன் தற்போது லீடர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. காரணம் டைட்டில் புரோமோவிலேயே மாஸான சண்டைக் காட்சியை இடம் பெறச் செய்திருந்தனர். இது மட்டும் இல்லாமல், வசனங்களும் உள்ளர்த்தம் நிறைந்ததாக இருந்தது. ஆனால் லீடர் என்ற டைட்டிலைப் பார்த்த பலரும் லெஜண்ட் சரவணன் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்வியை எழுப்பிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X