Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
“தி லெஜண்ட்“ படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்.. ரிலீசுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் !
சென்னை : சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் கதாநாயகனாக நடிக்கும் தி லெஜண்ட் திரைப்படத்தின் உரிமையை முன்னணி நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உல்லாசம், விசில் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தி லெஜ்ண்ட் .
இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யாஷிகா ஆனந்த், ராய்லட்சுமி ஆகியோர் பாடலுக்கு மட்டும் நடனமாடி உள்ளனர்.
நஷ்டம்
மட்டும்
100
கோடிக்கு
மேல்..
படு
தோல்வி
அடைந்த
“சாம்ராட்
பிருத்விராஜ்“

தி லெஜண்ட்
லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் அருள் இந்த படத்தின் மூலம் திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுக்க உள்ளார். தி லெஜண்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

பிளாக் அண்ட் பிளாக்
'தி லெஜண்ட்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

என் ரோல் மாடல்
அந்த விழாவில் செய்தியாளர்களிம் பேசிய, சரவணன் அருள், சினிமாவில் என்னுடைய ரோல் மாடல் ரஜினி மற்றும் விஜய் என அசத்தலாக பதிலளித்திருந்தார். மேலும், தி லெஜண்ட் திரைப்படம் ஆக்ஷன்,காதல், காமெடி,ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

வைரலான டிரைலர்
தி லெஜண்ட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. எடுக்கற சார்...அவதாரம் எடுக்குற' என்ற வசனத்தோடு சாஃப்ட் சைன்டிஸ்ட் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். 'இந்த முறை நான் அடிக்கற அடி மரண அடியாத்தான் இருக்கும்'என்று மிரட்டி இருக்கிறார் சரவணன் அருள். இணையத்தில் வெளியானதும் இந்த டிரைலர் மிகப்பெரிய அளவில் டிராண்டானது.

முன்னணி நிறுவனம்
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இந்த படம் நிறைய மாஸ் மொமன்ட்கள் உள்ளடக்கியதாக படமா இருக்கும் என்பதால் படத்தைக்காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான அன்புச்செழியன் படத்தை வெளியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.