அஜித் ரசிகர்களுக்கு விருந்து.. தொலைக்காட்சியில் வரிசையாக தல படங்கள்.. ரசிகர்கள் குஷி !
சென்னை : நடிகர் தல அஜித்தின் பிறந்தநாளையொட்டி முக்கிய தொலைகாட்சிகள் இன்று தல படத்தை ஒளிபரப்பி வருகின்றன.
Recommended Video
இன்று மே 1 உழைப்பாளர் தினம் மற்றும் நடிகர் தல அஜித்தின் பிறந்தநாள் ஆகும். தலயின் ரசிகர்கள் நேற்றே இணையத்தில் தங்களின் பாணியில் கொண்டாட்டங்களை துவங்கி விட்டனர்.

இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் தங்களை தாங்களே தனிமை படுத்தியிருக்கிறது. இதனால் தல ரசிகர்களினால் எந்த கொண்டாட்டங்களிலும் ஈடுபட முடியவில்லை. இல்லையென்றால் ரசிகர்கள் பேனர் வைப்பது தல பட ஸ்பெஷல் ஷோக்கள் போவது கேக் வெட்டி கொண்டாடுவது என பலவழிகளில் இன்றைய தினத்தை கொண்டாடி இருப்பார்கள்.
இருந்தும் இந்த முறை தங்களின் வீடுகளில் இருந்த படியே தல ரசிகர்கள் தங்களின் பிடித்தமான தல படத்தை பார்த்து மகிழ முக்கிய தொலைகாட்சி முடிவெடுத்துள்ளனர் அதன் படி தலயின் ஆல் டைம் பிடித்தமான படங்களையும் ஒளிப்பரப்புகின்றனர்.

இவ்வாறு அதிகபடியான படங்களை வைத்து இருக்கும் சன் தொலைகாட்சி தல பிறந்தநாளை கொண்டாட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமான 'மங்காத்தா' படத்தை காலை 9.30க்கு ஒளிப்பரப்பியது. மேலும் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் இதுவரை நாம் கண்டிராத ஸ்டைலிஷான அஜித்தை காண்பித்த படமான பில்லா படத்தை கலைஞர் தொலைக்காட்சி 1.30 மணிக்கு ஒளிப்பரப்பியது. மேலும் மாலையில் மற்றொரு தலயின் வெற்றி படமான கீரிடம் படத்தை 7மணிக்கு ஒளிப்பரப்புகிறது கலைஞர் தொலைகாட்சி.

தல அஜித் நடிப்பில் 1997ல் வெளியான ராசி படத்தை வசந்த் டிவி மற்றும் வேந்தர் டிவி ஆகிய இரு தொலைகாட்சிகளும் சரியாக ஒரே நேரத்தில் ஒளிபரப்பின. இது மிகவும் முக்கிய ஹீரோக்களுக்கு மட்டும் நடக்கும் விஷயமாகும். முற்றிலும் படங்களை மட்டும் ஒளிப்பரப்பும் ஜி திரை தொலைக்காட்சி தலயின் சமீபத்திய பிளாக்பஸ்டர் படமான நேர்கொண்ட பார்வை படத்தை ஒளிப்பரப்பியது.

இப்படி ரசிகர்களை வீட்டில் இருந்த படியே மகிழ்விக்க தொலைகாட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களை ஒளிப்பரப்பி வருகின்றனர். இந்த சமயத்தில் ரசிகர்கள் அனைவரும் தொலைகாட்சிகளில் தல படத்தை பார்த்து அதை மொபைலில் போட்டோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு படத்தை பற்றிய நினைவுகளையும் தற்போதும் படம் புல்லரிக்க வைக்கிறது என்றும் கூறி வருகின்றனர் .


Click it and Unblock the Notifications











