நல்ல மனுஷன் இந்த ஹீரோ.. ‘தி லெஜெண்ட்‘ இசைவிழாவில் பிரபு பேச்சு !
சென்னை : தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய பிரபு லெஜண்ட் சரவணனின் நல்ல மனுஷன் அவரது நல்ல மனசுக்கு படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
Recommended Video
தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
இந்த ட்ரெய்லரை பார்க்கும் போது காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என சகலமும் கலந்த மசாலா திரைப்படம் இது என தெரிகிறது.

நட்சத்திர பட்டாளங்கள்
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன், விளம்பரங்களில் நடித்து கவனம் ஈர்த்து வந்தார். இந்நிலையில், அவர் நடிப்பில் 'தி லெஜண்ட்' என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளது. ஜே. டி - ஜெரி இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளனர். பிரபு, நாசர், தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் மறைந்த நடிகர் விவேக், யோகிபாபு, மயில்சாமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

பிரபு உருக்கமான பேச்சு
தி லெஜெண்ட் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரபு விவேக் குறித்து மிகவும் உருக்கமாக பேசினார். இந்த நேரத்தில் தம்பி விவேக்கை ரொம்ப மிஸ் பண்றோம். லெஜெண்ட் சரவணன், விவேக்கின் இறுதிச்சடங்கில் கூடவே இருந்து அனைத்து உதவிகளையும் செய்து பார்த்துக்கிட்டாரு , கண்டிப்பா அவருடைய நல்ல மனசுக்காகவே இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று பேசினார் பிரபு.

வாழ்த்துக்கள்
தி லெஜெண்ட் படத்திற்காக சரவணன், ஆக்ஷன், ரொமான்ஸ் என அனைத்திலும் தனது கடினமாக உழைப்பை கொடுத்து இருக்கிறார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இறங்கி வேறலெவலில் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும், படக்குழுவிற்கும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

எனது ரோல் மாடல்
இசைவெளியீட்டுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய லெஜெண்ட் சரவணன். சினிமாவில் தனது ரோல் மாடல் ரஜினி சார், விஜய் சார் தான் என்றார். மேலும் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமே படத்தின் வெற்றிக்காகத்தான் என்றார். மேலும், என்னை விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று மிகவும் நிதானமாக அழகாக பதிலளித்தார். லெஜெண்ட் சரவணன்.


Click it and Unblock the Notifications











