Urvashi Rautela New House: 29 வயதில்.. 190 கோடிக்கு பங்களா வீடு வாங்கிய லெஜண்ட் பட ஹீரோயின்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா மும்பையின் பிரதான பகுதியில் 190 கோடி ரூபாய்க்கு பங்களா வீடு வாங்கி இருப்பது தான் ஒட்டுமொத்த பாலிவுட்டில் பெரும் பேச்சாக மாறி உள்ளது.
தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா.
பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக கலக்கி வந்த ஊர்வசி ரவுத்தேலா வெறும் 29 வயதிலேயே 190 கோடி ரூபாய்க்கு பங்களா வாங்கி உள்ள நிலையில், ஒட்டுமொத்த திரையுலகமே வியப்பில் ஆழ்ந்துள்ளது.

பாலிவுட் நடிகை: 2013ல் வெளியான சன்னி தியோலின் சிங் சாப் தி கிரேட் படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. மிஸ்டர் ஐராவதா படத்தின் மூலம் 2015ல் கன்னட திரையுலகில் காலடி வைத்தார்.
சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4 மற்றும் விர்ஜின் பானுப்பிரியா என பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக நடித்து கலக்கியவர் ஊர்வசி ரவுத்தேலா.
தி லெஜண்ட் ஹீரோயின்: கடந்த ஆண்டு கோலிவுட்டில் தி லெஜண்ட் படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக மதுமிதா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட் மட்டுமின்றி சமீப காலமாக தென்னிந்தியாவில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் ஊர்வசி ரவுத்தேலா வால்டர் வீரய்யா படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார். தெலுங்கில் அவர் நடித்துள்ள பிளாக் ரோஸ் படம் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது.
190 கோடியில் பங்களா: பல பாலிவுட் நடிகர்களே 100 கோடியில் கூட பங்களா வாங்க யோசித்து வரும் நிலையில், அதிரடியாக ஊர்வசி ரவுத்தேலா 190 கோடிக்கு 4 மாடி கொண்ட பிரம்மாண்ட பங்களா ஒன்றை மும்பையின் பிரதான பகுதியில் வாங்கி ஒட்டுமொத்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார்.
யஷ் ராஜ் சோப்ராவின் மனைவி (மறைந்த) பமேலா சோப்ராவின் வீட்டை ஒட்டியபடி இந்த பிரம்மாண்ட பங்களா அமைந்துள்ளது.

என்ன என்ன வசதிகள்: இந்த 4 மாடி சொகுசு பங்களாவை சுற்றி அழகான தோட்டம் ஒன்றும் ஜிம், நீச்சல் குளம், யோகா செய்வதற்கான தனி இடம் உள்ளிட்டவை உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 6 மாதங்களாக தனக்கான ஒரு கனவு பங்களாவை வாங்க மும்பையின் பல பகுதிகளில் அலசி ஆராய்ந்த ஊர்வசி ரவுத்தேலா இறுதியாக இந்த பங்களாவை வாங்கி உள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











