வதந்திக்கு ஒரு அளவில்லையா? 'தி லெஜண்ட்‘ ஹீரோயின் ஊர்வசி ரவுத்தேலா விளக்கம்!

சென்னை : 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஊர்வசி ரவுத்தேலா அப்படத்தில் நடிக்க அதிக சம்பளம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

The Legend Movie Review | Yessa ? Bussa ?| The Legend | J. D.–Jerry |*Review

சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரும் தொழில் அதிபருமான லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த தி லெஜண்ட் படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது.

 லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணன் இப்படத்தில் ஒரு விஞ்ஞானியாக நடிக்கிறார். ஊர்வசி ரவுத்தேலா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தேலா முதன் முதலாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் நாசர், சுமன், பிரபு, விவேக், ரோபோ ஷங்கர், சச்சு,யோகி பாபு, மயில்சாமி, மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.

தி லெஜண்ட் வசூல்

தி லெஜண்ட் வசூல்

ஜூலை 28ந் தேதி உலகம் முழுவதும் 'தி லெஜண்ட்' 2500 திரையரங்குகளில் 600க்கும் மேற்பட்ட திரையரங்கில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சியாக வெளியானது. துபாய், மும்பை, கொச்சி, பெங்களூர், ஹைதராபாத் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் படம் வெளியானது. தமிழகத்தில் முதல் நாள் ரூ.2 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் உலகம் முழுக்க ரூ.6 கோடி வரை வசூலித்துள்ளது.

பல கோடி செலவு

பல கோடி செலவு

இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் 30 கோடி செலவு செய்ததாகவும் இந்த படத்தின் பட்ஜெட் 150 கோடியை தாண்டியுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் லெஜண்ட் திரைப்படம் கேரள பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் ரூ.4.7 லட்சம் வசூலித்து பிரபாஸ் படத்தையே பின்னுக்கு தள்ளி உள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் தள்ளி உள்ளது.

ஊர்வசி ரவுதலா மறுப்பு

ஊர்வசி ரவுதலா மறுப்பு

இந்நிலையில், ஊர்வசி ரவுத்தேலா சம்பளமாக ரூ.20 கோடி பெற்றதாக செய்திகள் வெளியானது. மேலும், கோலிவுட்டில் முன்னணி நடிகையான நயன்தாராவே இவ்வளவு சம்பளம் வாங்காத நிலையில் ஊர்வசி ரவுத்தேலாவுக்கு இவ்வளவு கோடி சம்பளம் வழங்கப்பட்டதா? என்று கோலிவுட் ஆச்சரியப்பட்டது. ஆனால், இதை ஊர்வசி தரப்பு மறுத்துள்ளது. ரூ.20 கோடி சம்பளம் வாங்கவில்லை என்றும் ஆனால், ஓர் அறிமுக நடிகைக்கும் கிடைக்கும் சம்பளத்தை விட அதிகமாகவே அவர் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X