லெஜண்ட் சரவணாவை தொடர்ந்து பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகப்போகும் பாலிவுட் நடிகை.. பண மழை தான்!

ஹைதராபாத்: பாலிவுட்டில் கிளாமர் படங்களில் மட்டுமே நடித்து வந்த ஊர்வசி ரவுத்தேலாவுக்கு தென்னிந்தியாவில் அதிக சம்பளத்துடன் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

2013ம் ஆண்டு வெளியான சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4 என எக்கச்சக்க பிட்டுக்கள் அடங்கிய படங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்தார்.

The Legend heroine Urvashi Rautela next joins with NBK 109

தமிழில் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் படத்தில் நடித்து கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த ஊர்வசி ரவுத்தேலா அடுத்ததாக நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 109வது படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

300 கோடி பட்ஜெட்டில் பாலய்யா படம்: தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணா இந்த ஆண்டு பொங்கலுக்கு வீர சிம்ஹா ரெட்டி மற்றும் ஆயுத பூஜைக்கு பகவந்த் கேசரி உள்ளிட்ட படங்களை ரிலீஸ் செய்து விஜய்க்கே டஃப் கொடுத்தார். அந்த இரு படங்களும் 150 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டிய நிலையில், அடுத்த படத்தை 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

மல்டி ஸ்டார் படம்: ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் எல்லாம் எப்படி மல்டி ஸ்டார் படங்களாக உருவாகிறதோ அதே போல நாமும் ஏன் பண்ணக் கூடாது என நினைத்த பாலகிருஷ்ணா ரவீந்திரா பாபி இயக்கத்தில் நடிக்க உள்ள 109வது படத்தில் துல்கர் சல்மான், அனிமல் பட வில்லன் பாபி தியோல் மற்றும் கவுதம் மேனன் என ஏகப்பட்ட நடிகர்களை இணைத்துக் கொண்டு வருகிறார்.

லெஜண்ட் ஹீரோயின்: இந்நிலையில், லெஜண்ட் படத்தில் ஹீரோயினாக நடித்த பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா தான் இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வீர சிம்ஹா ரெட்டி படத்தில் ஹனி ரோஸ், ஸ்ருதிஹாசன், வரலக்‌ஷ்மி சரத்குமார் நடித்திருந்தனர். பகவந்த் கேசரி படத்தில் காஜல் அகர்வால், ஸ்ரீலீலா நடித்த நிலையில், NBK 109 படத்திற்கு ஊர்வசி ரவுத்தேலாவை புக் பண்ணியிருக்கிறார் பாலகிருஷ்ணா எனக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு சம்மருக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

12 கோடி சம்பளம்: லெஜண்ட் படத்தில் நடிக்க ஊர்வசி ரவுத்தேலாவுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த படத்தில் நடிக்க 12 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலிவுட்டில் கூட இந்த அளவுக்கு சம்பாதிக்காமல் இருந்து வந்த ஊர்வசி ரவுத்தேலாவுக்கு தென்னிந்தியாவில் பல கோடிகளை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X