அண்ணாச்சியின் ’தி லெஜன்ட்’ மூவி.. அட இது அந்த படம் மாதிரி இருக்கே?..சந்தேகிக்கும் நெட்டிசன்கள்

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அவரே தயாரித்து நடித்துள்ள 'தி லெஜன்ட்' பட ட்ரெய்லர் பிரம்மாண்டமாக நேற்று வெளியானது.

Recommended Video

கலாய்ப்பவர்களுக்கு பதிலடி குடுத்த Legend | Legend Audio Launch | Legend Saravanan Speech #Kollywood

புதுமுக நடிகர் தயாரிப்பாளர் படம் போல் அல்லாமல் பிரபல நடிகருக்கு கிடைக்கும் வரவேற்பு போல் பெரிய அளவில் வரவேற்பு காணப்பட்டது.

மேடையில் 10 நடிகைகள், பல நடிகர்கள் அண்ணாச்சியை வானளாவ புகழ்ந்ததில் அண்ணாச்சி மெனக்கிட்டதை (?) காணமுடிந்தது.

அண்ணாச்சியின் தி லெஜன்ட் மூவி

அண்ணாச்சியின் தி லெஜன்ட் மூவி

சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சி தயாரித்து நடித்து வெளிவர உள்ள படம் தி லெஜன்ட். 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொரோனா காலக்கட்டத்தை கடந்து தற்போது வெளியாகும் நிலையில் நேற்று ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. பிரம்மாண்டமான விழாவில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

10 நாயகிகள் சங்கமம்

10 நாயகிகள் சங்கமம்

இந்தப்படத்தில் முக்கிய கதாநாயகி தவிர 10 கதா நாயகிகள் இடம்பெற்றுள்ளார்கள், பாடல்கள் எடுக்கப்பட்ட விதம், கலை, காட்சி அமைப்புகள், கோரியோகிராப், கேமரா, சண்டைக்காட்சிகள் அனைத்துமே புதுமுக நடிகருக்கு உள்ளதுபோல் அல்லாமல் மிகப்பெரிய நடிகர்களுக்கு உள்ளதுபோல் அமைந்துள்ளது கலைஞர் மெனக்கிட்டுள்ளது தெரிகிறது. அண்ணாச்சி பணத்தை வாரி இறைத்துள்ளதும் படம் முழுவதும் தெரிகிறது.

பிரம்மாண்ட விழாவில் ட்ரெய்லர் வெளியீடு

பிரம்மாண்ட விழாவில் ட்ரெய்லர் வெளியீடு

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவையே பிரம்மாண்ட விழாவாக நடத்தியுள்ளார் அண்ணாச்சி. ஊடகங்கள், யூடியூபர்கள் மிகப்பெரிய நடிகர் நிகழ்ச்சியில் குவிவதுபோல் நெருக்கியடித்ததை காணும்போது எங்கேயோ நெருடியது. ஆனாலும் அதைக்கடந்து நிகழ்ச்சியை காணும்போது இன்னும் பிரமிப்பு அதிகமானது. 10 முன்னணி நடிகைகள் ஒரே மேடையில், அனைவரும் அண்ணாச்சியை புகழ்ந்தது, என்னடா இது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வெள்ளையப்பனை வாரி இரைத்தால்

வெள்ளையப்பனை வாரி இரைத்தால்

வெள்ளையப்பனை வாரி இரைத்தால் போதும் எப்படி வேண்டுமானாலும் புகழ நடிகைகளும், திரையுலகினரும் தயாராக இருக்கிறார்கள் என நெட்டிசன்கள் ஒருபுறம் விமர்சிக்க நடிகை லதா நான் திரையுலகிற்கு வந்து 50 வது ஆண்டில் அண்ணாச்சியுடன் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன் என்று சொன்னதை ஏதே..பெருமையா? எம்ஜிஆர் படத்தின் ஆஸ்தான நாயகி அம்மா நீங்கன்னு நெட்டிசன்கள் வடிவேலு பாணியில் கேட்பதையும் பார்க்க முடிகிறது.

அண்ணாச்சியின் தன்னம்பிக்கை

அண்ணாச்சியின் தன்னம்பிக்கை

அண்ணாச்சியின் தன்னம்பிக்கை மிகப்பெரியது. யாருடனும் நடிக்க மாட்டேன், தனி ஆளாகத்தான் நடிப்பேன், நல்ல இயக்குநர்கள் வந்தால் ஏற்பேன், படம் தயாரிப்பது தொடரும் என அறிவித்துள்ளது அவரது தன்னம்பிக்கையை காட்டுகிறது. அதே வேளையில் பான் இந்தியா படம் போல் தி லெஜன்ட் இருக்கும் என்று சொன்னதை ஜீரணிக்க சற்று நேரம் தான் ஆனது.

அட இது அந்த படம் மாதிரி இருக்கே..

அட இது அந்த படம் மாதிரி இருக்கே..

படத்தின் ட்ரெய்லருக்கு வருவோம். படத்தின் ட்ரெய்லர், விஞ்ஞானி சரவணன் தனது ஊருக்கு நல்லது செய்ய வந்துள்ளதும், அவருக்கு ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் வில்லன் டீம்கள் தொல்லை கொடுப்பதும், பெரிய வில்லன் சுமன் (அவரே தான் அந்தப்படத்தில் வந்தாரே அவர்தான்) வருவதும் இந்தப்படத்தை எங்கேயோ இதற்கு முன் பார்த்திருக்கிறோமோ என்று நினைக்கும்போது அட ஆமா இது அவரு படமில்லன்னு சொல்ல தோணுது. உங்களுக்கும் அப்படித்தானே தோணுதுன்னு விவேக் காமெடி போல கேட்கத்தோணுது.

அட அந்த பாட்டுக்கூடவா அப்படியே இருக்கணும்

அட அந்த பாட்டுக்கூடவா அப்படியே இருக்கணும்

அதற்கு ஏற்றார்போல் வாஜி வாஜி வாஜின்னு சிவாஜி படத்தில் வரும் பாடல் ஸ்டைலில் ஒரு பாடல் அதே பாடலை ஞாபகப்படுத்துது. என்ன செய்வது அண்ணாச்சியை ஆக்‌ஷன் கிங் ஆக்கியே தீருவோம்னு படக்குழு முடிவெடுத்து வேலை செய்யும்போது அங்க இங்க இதுபோல் ரிப்பீட்டு வரத்தான் செய்யும். ஏன் அண்ணாச்சி நடித்தால் பார்க்க மாட்டீகளோன்னு நாளை யாராவது கேட்கலாம்.

திரைக்கலைஞர்களின் மெனக்கிடல் 5 மில்லியன் பேர் பார்த்துள்ள ட்ரெய்லர்

திரைக்கலைஞர்களின் மெனக்கிடல் 5 மில்லியன் பேர் பார்த்துள்ள ட்ரெய்லர்

பத்துவருஷத்துக்கு முன் பார்த்த பல காட்சிகள், பாடல்காட்சிகள் அப்படியே கண்முன் வந்து போகுது. ஒருவிஷயத்தை இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது பாராட்டியே தீர வேண்டும். அண்ணாச்சியின் விளம்பரப்படம் எப்படி பேசுமோ, அதேபோல் படத்திலும் கேமரா, கோரியோகிராப், ஸ்டண்ட் கலைஞர்கள் வேலை பக்காவாக இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் ட்ரெய்லர் வீடியோவை 5 மில்லியன்பேர் பார்த்துள்ளதே அதற்கு சாட்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X