இதெல்லாம் ரொம்ப ஓவர்.. ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி.. அலம்பல் பண்ணும் லெஜண்ட் பட நடிகை!
சென்னை: தி லெஜண்ட் திரைப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஐட்டம் பாடலுக்கு ஆட கோடியில் சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா. 2013ம் ஆண்டு வெளியான சிங் சாப் தி கிரேட் என்ற இந்தி திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து பாக் ஜானி, சனம் ரே, காபில், ஹேட் ஸ்டோரி 4, வெர்ஜின் பானுப்ரியா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஊர்வசி ரவுத்தேலா: தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். லெஜண்ட் சரவணன் விஞ்ஞானியாக நடித்த இப்படத்தில் ஊர்வசி ரவுத்தேலா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் நாசர், சுமன், பிரபு, விவேக், ரோபோ ஷங்கர், சச்சு,யோகி பாபு, மயில்சாமி, மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்திருந்தனர்.
அடுத்தடுத்த படங்களில் பிஸி: இத்திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து ஊர்வசி ரவுத்தேலாவுக்கு படவாய்ப்புகள் தேடி வந்தன. தெலுங்கில் வெளியான வால்டர் வீரய்யா படத்தில் சிரஞ்சீவியுடனும் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து ராம் பொத்தினேனி நடிக்கும் படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

சம்பளமே அதிகம் : ஊர்வசி ரவுத்தேலா தி லெஜண்ட் படத்தில் நடித்ததற்கு ரூ.20 கோடி சம்பளமாக பெற்றதாக செய்திகள் வெளியானது. கோலிவுட்டில் முன்னணி நடிகையான நயன்தாரா இந்தளவுக்கு சம்பளம் வாங்காத நிலையில் ஊர்வசி ரவுத்தேலாவுக்கு கோடியில் சம்பளம் வழங்கப்பட்டதா? என்று கோலிவுட் ஆச்சரியப்பட்டது. இதை மறுத்த ஊர்வசி, ரூ.20 கோடி சம்பளம் தரவில்லை. ஆனால், ஓர் அறிமுக நடிகைக்கு கிடைக்கும் சம்பளத்தை விட அதிகம் என்று கூறியிருந்தார்.
ஒரு நிமிடத்திற்கு ரூ.1 கோடி: பல படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வரும் ஊர்வசி,தெலுங்கு படத்தின் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆட 3 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.3 நிமிடம் வரும் அந்த பாடலுக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளமா அதெல்லாம் ரொம்ப ஓவருங்க என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











