ஆத்தாடி... ஒரு பாட்டுக்கு 30 டிரஸ்ஸா?.. “தி லெஜண்ட்“ பட சுவாரசியம் !
சென்னை : தி லெஜண்ட் திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் 30க்கும் மேற்பட்ட ஆடைகள் பயன்படுத்தப்பட்டதாக படத்தின் ஆடைவடிவடைப்பாளர் கூறியுள்ளார்.
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் சரவணன் அருள் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'
இப்படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளார். மேலும், பிரபு, நாசர், மறைந்த நடிகர் விவேக், யோகிபாபு, லிவிங்ஸ்டன்,சச்சு என ஏராளமான நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

'தி லெஜண்ட்'
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன், விளம்பரங்களில் நடித்து கவனம் ஈர்த்து வந்தார். இந்நிலையில், அவர் நடிப்பில் 'தி லெஜண்ட்' என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளது. ஜே. டி - ஜெரி இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளனர். 200 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் உலகமே வியந்து பார்க்கும் விஞ்ஞானியாக நடித்துள்ளார்.

ஹிட்டான பாடல்கள்
சில தினங்களுக்கு முன்னர் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மொசலோ மொசலு' மற்றும் 'வாடி வாசல்' பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. ஹாரிஸ் ஜெயராஜ் தி லெஜண்ட் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெளியாகியுள்ள 2 பாடல்களும் மெகா ஹிட்டாகியுள்ளன.

மிரட்டலான டிரைலர்
இப்படத்தின், இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில், தி லெஜெண்ட் படத்தின் டிரைலரை பிரபு வெளியிட்டார். 3 நிமிடம் ஓடக்கூடிய அந்த டிரைலரில், அதிரடி சண்டை காட்சிகள்,காதல், ரொமான்ஸ் என மாஸ் காட்டி இருந்தார் சரவணன். இப்படத்தில் டிரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாக 5 மில்லியன் வியூஸ்களைக் கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்திற்கு சென்றுள்ளது.

ஒரு பாடலுக்கு 30 ஆடைகள்
இந்நிலையில் இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் சத்யா, இப்படம் குறித்து சுவாரசியத் தகவலை பகிர்ந்துள்ளார். அதில், இந்த படத்திற்காக லெஜண்ட் சரவணன் மிகவும் கடுமையாக உழைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'மொசலோ மொசலு' பாடலுக்காக கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட ஆடைகளை தேர்வு செய்தோம். அனைத்து ஆடைகளை, கொஞ்சம் கூட அலுத்துக்கொள்ளாமல் போட்டு பார்த்தார். இது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

அவரை பார்த்து வியந்தேன்
அவர் சாப்பாட்டைக்கூட பொருட்படுத்தாமல், அவரின் மெனக்கெடலை பார்க்கும் போது நான் வியப்படைந்தேன். நான் பணியாற்றிய படத்திலேயே குறிப்பாக விஜய் சார் படத்தை விட இந்த படத்திற்குதான் அதிகமாக உடைகள் பயன்படுத்தப்பட்டதாக ஆடை வடிவமைப்பாளர் சத்யா கூறினார்.


Click it and Unblock the Notifications











