சூப்பர்ஸ்டார் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் லெஜண்ட் சரவணன்... இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: சூரி கதாநாயகனாக நடித்த கருடன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தில், லெஜண்ட் சரவணன் கமிட்டாகி உள்ள நிலையில், அவரின் புதுவிதமான கெட்டப் போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. புதுப்படத்திற்காக லெஜண்ட் வேற மாதிரி மாறியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், தீபாவளி, பொங்கல் வந்து விட்டால் போதும், கலர்ஃபுல்லான உடையில் இளம் நடிகைகளுடன் கடை விளம்பரத்தில் பெஸ்ட் பெஸ்ட் என ஆட்டம் போட்ட வைத்துவிடுவார். இவர் நடித்த விளம்பரத்திற்கு விமர்சனங்கள் கடுமையாக எழுந்த போதும் அதைப்பற்றி கவலைப்படாமல் தன் இலக்கை நோக்கி நடந்து கதாநாயகனாக மாறினார்.

தி லெஜண்ட்: அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜெர்ரி & ஜெடி ஆகியோர் இயக்கிய தி லெஜண்ட் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, ஆகிய மொழிகளில் திரையரங்களில் வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுத்தந்தது.

சூப்பர் ஹிட் பாடல்கள்: இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற வாடிவாசல் பாடல், மொசலோ மொசலு பாடல் என அனைத்துப்பாடல்களும் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து ஹிட்டடித்தன. டான்ஸ், சண்டை என அனைத்திலும் மனுஷன் பின்னிபெடல் எடுத்திருந்தார். தியேட்டரில் வெளியான தி லெஜண்ட் திரைப்படம் 20 கோடி வரை வசூல் செய்தது. இப்படம் தியேட்டரில் மட்டுமில்லாமல், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.

ரஜினிக்கே டஃப் கொடுப்பாரு போல: தி லெஜண்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது படம் குறித்த அறிவிப்பை லெஜண்ட் சரவணன் வெளியிட்டுள்ளார். அந்த படத்தை எதிர்நீச்சல், கொடி, பட்டாஸ் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார். அண்மையில் இவர் இயக்கத்தில் உருவான கருடன் மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது. தற்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த போட்டோவில் லெஜண்ட் சரவணன் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் அளவில் செம மாஸாக உள்ளார். ரசிகர்கள் அந்த போட்டோவை டிரெண்டாக்கி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











