லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை ஓரங்கட்டிய ‘தி லெஜெண்ட்’ ஹீரோயின்: யம்மாடியோவ் இவ்ளோ சம்பளமா?
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான லெஜெண்ட் சரவணன் 'தி லெஜெண்ட்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
இந்தப் படத்தில் லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக மாடல் அழகியும் பாலிவுட் நடிகையுமான ஊர்வசி ரவுடேலா நடித்துள்ளார்.
'தி லெஜெண்ட்' படத்தில் நடிக்க ஊர்வசி ரவுடேலாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி லெஜெண்ட்
லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக என்ட்ரி ஆகியுள்ள 'தி லெஜெண்ட்' திரைப்படம், நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரிலீஸுக்கு முன்னரே இந்தப் படத்திற்காக மிகப் பெரிய அளவில் ப்ரோமோஷன் நடைபெற்றது. ஹீரோ லெஜெண்ட் சரவணன், நாயகி ஊர்வசி ரவுடேலா உள்ளிட்ட படக்குழுவினர் தீயாக வேலைப் பார்த்தனர். தற்போது பான் இந்தியா படமாக வெளியான 'தி லெஜெண்ட்' ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஊர்வசி ரவுடேலா
'தி லெஜெண்ட்' படம் ஆரம்பிக்கப்பட்டதுமே ஹீரோயின் யார் என்பதை தெரிந்துகொள்ள, ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டினர். ஏற்கனவே லெஜெண்ட் சரவணனுடன் விளம்பரங்களில் நடித்த தமன்னா, ஹன்சிகா ஆகியோரில் யாரும் நடிப்பார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால், இந்த ரேசில் யாரும் எதிர்பார்க்காத வகையில், மாடல் அழகியும் பாலிவுட் நடிகையுமான ஊர்வசி ரவுடேலா வெற்றிப் பெற்றார்.

ரசிகர்களிடம் வரவேற்பு
'தி லெஜெண்ட்' படத்தில் அண்ணாச்சி லெஜெண்ட் சரவணனுடன் சிறப்பாக நடித்திருந்தார் ஊர்வசி ரவுடேலா. அவரது நடிப்பும், நடனமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அவர் தொடர்ந்து தமிழ் படங்களில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 'தி லெஜெண்ட்' பான் இந்தியா படமாக வெளியானதால், மற்ற மொழி படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

இவ்வளவு சம்பளமா?
இதனிடையே 'தி லெஜெண்ட்' படத்தில் நடிப்பதற்காக, ஊர்வசி ரவுடேலாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் தொடர்ந்து உச்சத்தில் இருப்பது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மட்டுமே. ஒரு படத்தில் நடிக்க 5 முதல் 7 கோடி ரூபாய் வரை நயன்தாராவுக்கு கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது. ஆனால், 'தி லெஜெண்ட்' படத்தின் நாயகி ஊர்வசிக்கு, 20 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











