அதுக்குத்தானே ஊர்வசி ரவுத்தேலாவே.. பாலிவுட்டில் பிரம்மாண்ட ரிலீஸுக்கு பிளான் போட்ட தி லெஜண்ட்!
சென்னை: லெஜண்ட் சரவணா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள தி லெஜண்ட் திரைப்படம் இம்மாதம் 28ம் தேதி பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்ய அண்ணாச்சி ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், படத்தின் இந்தி வெளியீட்டு உரிமத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ள நிலையில், பாலிவுட்டிலும் பக்காவாக என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார்.

செம கதை
சாதாரண கிராமத்து ஆள் எப்படி படித்து விஞ்ஞானியாகி உலகத்துக்கே தேவையான ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறார் என்றும், அவருக்கு வரும் பிரச்சனைகளை எப்படி அடித்து நொறுக்குகிறார் என்பதுமே தி லெஜண்ட் படத்தின் அட்டகாசமான கதை என தகவல்கள் வெளியாகி உள்ளன. படம் பற்றி பேசிய இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரியும் படத்தில் யூனிவர்ஸல் கன்டென்ட் இருக்கு அதனால் தான் படத்தை பான் இந்தியா ரிலீசாக வெளியிட திட்டமிட்டுள்ளோம் எனக் கூறியுள்ளனர்.

பான் இந்தியா ரிலீஸ்
தமிழில் இந்த படத்தை கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் சுமார் 30 கோடிக்கு வாங்கி வெளியிடுகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமத்தை பிரபல மலையாள தயாரிப்பாளர் மேஜிக் பிரேம்ஸ் ஸிஸ்டின் ஸ்டீபன் கைப்பற்றி உள்ளார்.அதே போல தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலும் படத்தை ரிலீஸ் செய்ய பக்காவாக பிளான் போட்டு உரிய விநியோகஸ்தர்களிடம் கொடுத்து வருகிறார் சரவணன் அருள்.

இந்தியில் பிரம்மாண்ட ரிலீஸ்
தென்னிந்தியாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் இந்த படத்தை பெரிய அளவில் ரீச் செய்ய வேண்டும் என பெரும் முனைப்பை காட்டி வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் இந்தி வெளியீட்டு உரிமத்தை பிரபல வினியோகஸ்தரான கணேஷ் பிலிம்ஸ் நம்பி ராஜன் பெற்றுள்ளார். சமீபத்தில் லெஜண்ட் சரவணாவை நேரில் சந்தித்து இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி டிரெண்டாகின.

அதுக்குத்தான் ஊர்வசி ரவுத்தேலா
படத்தை பான் இந்தியா ரிலீசாக வெளியிட வேண்டும் என்றும், பாலிவுட்டில் பெரிய அளவில் படத்தை கொண்டு போக வேண்டும் என்பதை ஆரம்பத்திலேயே முடிவு செய்த நிலையில் தான் பாலிவுட்டின் கவர்ச்சி குயின் ஊர்வசி ரவுத்தேலாவை இந்த படத்தில் ஜோடியாக போட்டுள்ளனர். சிங் சாப் தி கிரேட், சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4, பாகல் பன்டி,விர்ஜின் பானுப்பிரியா உள்ளிட்ட ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார் ஊர்வசி ரவுத்தேலா.


Click it and Unblock the Notifications











