Don't Miss!
- Lifestyle
பலவீனமான சிறுநீரகங்களை வலுவாக்க வேண்டுமா? இதோ அதற்கான சில எளிய இயற்கை வழிகள்!
- News
தினசரி ரூ.2000, மாதம் ரூ.62,500 சம்பாதித்தால் வரி இல்லை.. பட்ஜெட்டில் சொன்ன முக்கிய விஷயமே இதுதான்!
- Finance
1 அல்ல 2 இல்ல.. 35000 கோடி..! பட்ஜெட் 2023 அறிவிப்பால் கஜானாவில் ஓட்டை.. எந்த அறிவிப்பு..?!
- Automobiles
நேபாளத்தில் நம்ம ஊர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!! விலைகளை மட்டும் பார்த்துடாதீங்க... இங்கு எவ்வளவோ பரவாயில்லை
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த கேள்வியை ரஜினி,கமலிடம் கேட்டிருக்க வேண்டியதுதானே..தி லெஜண்ட் சரவணனின் நச் பதில்!
சென்னை : பெஸ்ட் பெஸ்ட்னு ஆட்டம் போட்டு பலரின் மனம் கவர்ந்த தி லெஜண்ட் சரவணன் நடித்த, தி லெஜண்ட் திரைப்படம் வரும் 28ந் தேதி வெளியாக உள்ளது.
Recommended Video
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் தி லெஜண்ட் செய்தியாளர்களே வியந்து போகும் அளவுக்கு சும்மா நச்சுனு பதிலளித்து வருகிறார்.
அந்நியன் அவதாரம் எடுத்த தி லெஜண்ட் ஹீரோ..பல மொழியில் மாறி மாறி புரோமோஷன். மிரட்டுபோன ரசிகர்கள்!

தி லெஜண்ட்
சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான லெஜண்ட் சரவணன் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். முதலில் தனது நிறுவனம் தொடர்பான விளம்பர படங்களில் நடித்து வந்த லெஜண்ட் சரவணன் அடுத்ததாக வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் தி லெஜண்ட்.

முன்னணி நடிகர்கள்
இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்கி உள்ளார். இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விவேக், பிரபு, யோகிபாபு, நாசர், மயில்சாமி, பழம் பெரும் நடிகை சச்சு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் சாதனை படைத்தது.

ஜூலை 28ந் தேதி ரிலீஸ்
இத்திரைப்படம் ஜூலை 28ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் சரவணன் தீவிரம்காட்டி வருகிறார். பான் இந்திய திரைப்படமாக இத்திரைப்படம் வெளியாக உள்ளதால், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழியில் மாறி மாறி பேசி அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை திகைப்பில் ஆழ்த்தினார்.

அவர்களிடம் கேட்பீர்களா?
அப்போது ஒரு பத்திரிக்கையாளர், இந்த வயதில் ஏன் நடிக்க வந்தீர்கள் என கேட்டார். இதற்கு கூலாக சிரித்தபடி பதில் அளித்த லெஜண்ட் சரவணன், இந்தியில் அபிதாப் பச்சன் இன்னும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். அதே போல ரஜினி,கமல், சரத்குமார் என அனைவரும் என்னைவிட வயதில் மூத்தவர்கள் அவர்கள் அனைவரும் இன்னும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த கேள்வி கேட்பீர்களா? என சும்மா நச்சுனு பதில் அளித்தார்.

சினிமா என் கனவு
தொடர்ந்து பேசிய லெஜண்ட், சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என கனவு. அந்த கனவை அடைய நிறைய உழைக்க வேண்டி இருந்தது. வியாபாரத்தில் கடுமையாக உழைத்து ஓர் இடத்தை பிடித்து அதற்கான கனவை நோக்கி நடந்தேன். தற்போது தான் அதற்கான நேரம் கிடைத்துள்ளது என்று பலரின் வாயடைத்து போகும் அளவுக்கு அழகாக பதிலளித்துள்ளார் தி லெஜண்ட்.