பெஸ்ட்..பெஸ்ட்னு ஆடியே சாதிச்சிட்டாரு அண்ணாச்சி..800 தியேட்டர்களில் ரிலீஸ்..மிரட்டுமா? “தி லெஜண்ட்“
சென்னை : சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் கதாநாயகனாக நடிக்கும் தி லெஜண்ட் திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் எத்தனை தியேட்டரில் வெளியாகப்போகுது தெரியுமா?
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் அனைத்து வயதுடைய ஹீரோயின்களுடனும் ஆட்டம் போட்டு வந்த சரவணன் அருள், வெள்ளித்திரையில் காலடி எடுத்துவைத்து மிரட்ட உள்ளார். தி லெஜண்ட் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
உல்லாசம், விசில் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தி லெஜ்ண்ட்.

தி லெஜண்ட்
லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் அருள் இந்த படத்தின் மூலம் திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுக்க உள்ளார். தி லெஜண்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யாஷிகா ஆனந்த், ராய்லட்சுமி ஆகியோர் பாடலுக்கு மட்டும் நடனமாடி உள்ளனர்.

பிளாக் அண்ட் பிளாக்
‘தி லெஜண்ட்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா ஆகியோர் கலந்து கொண்டனர். இசை வெளியீட்டு விழாவே கலர்புல்லாக மிகவும் கோலாகலமாக நடந்தது.

என் ரோல் மாடல்
அந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய, சரவணன் அருள், சினிமாவில் என்னுடைய ரோல் மாடல் ரஜினி மற்றும் விஜய் என அசத்தலாக பதிலளித்திருந்தார். மேலும், தி லெஜண்ட் திரைப்படம் ஆக்ஷன்,காதல், காமெடி,ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
Recommended Video

வைரலான டிரைலர்
தி லெஜண்ட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. எடுக்குறேன் சார்...அவதாரம் எடுக்குறேன் என்ற வசனத்தோடு சைன்டிஸ்ட் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். 'இந்த முறை நான் அடிக்கற அடி மரண அடியாத்தான் இருக்கும்'என்று மிரட்டி இருந்தார் சரவணன் அருள். இணையத்தில் வெளியானதும் இந்த டிரைலர் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.

ஆத்தாடி இத்தனை திரையரங்கிலா?
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக உலகம் முழுவதும் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 800 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் என்கிற தகவலும் வெளியாகி இருக்கிறது.பல விமர்சனங்களை கடந்து இன்று ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருக்கும் சரவண அருளின் படத்தைப்பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











