இது லெஜண்டின் வாடிவாசல்.. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் எப்போ ரிலீசாக போகுது தெரியுமா?
சென்னை: சூர்யாவின் வாடிவாசல் படம் இன்னும் எடுக்கவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் வாடி வாசல் பாடலுடன் களமிறங்க ரெடியாகி விட்டார் லெஜண்ட் சரவணன் அருள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லெஜண்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான மொசலு மொசலு பாடல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், இரண்டாவது சிங்கிள் டைட்டில் வாடி வாசல் என்றும் அதன் ரிலீஸ் தேதி பற்றிய ஹாட்டான அப்டேட்டும் தற்போது வெளியாகி உள்ளது.
லெஜண்ட் படத்தின் ஹீரோயின் ஊர்வசி ரவுத்தேலா தற்போது கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தி லெஜண்ட்
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சரவணன் அருள் நடிப்பில் உருவாகி உள்ள தி லெஜண்ட் திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ளது. இரட்டை இயக்குநர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இந்த படத்தை இயக்கி உள்ளனர். விரைவில் பான் இந்தியா திரைப்படமாக இந்த படம் வெளியாக உள்ளது.

மொசலு மொசலு
யாஷிகா ஆனந்த் உடன் லெஜண்ட் சரவணா அட்டகாசமாக நடனமாடிய முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இந்த பாடலை ஏகப்பட்ட ரசிகர்கள் லைக் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆன் ஸ்க்ரீனில் லெஜண்ட் சரவணாவும் கலர்ஃபுல்லாக பல வித உடைகளில் தோன்றி ஆடிப் பாடி அசத்தினார்.

வாடி வாசல் வருது
சூர்யாவின் வாடிவாசல் வருவதற்கு முன்பாகவே லெஜண்ட் சரவணாவின் வாடி வாசல் பாடல் வெளியாக உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது திங்க் மியூசிக் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வரும் மே 20ம் தேதி தி லெஜண்ட் படத்தின் செகண்ட் சிங்கிளான வாடி வாசல் பாடல் வெளியாகிறது.

கான்ஸில் ஊர்வசி
தி லெஜண்ட் படத்தில் லெஜண்ட் சரவணாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ள பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுத்தேலா தற்போது இந்தியா சார்பில் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். முதன் முறையாக கான்ஸ் ரெட்கார்ப்பெட்டில் படு கவர்ச்சியான உடையில் அவர் ராயல் நடைபோட்ட புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











