Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ராய் லக்ஷ்மியுடன் குத்தாட்டம் போட்ட லெஜண்ட் அண்ணாச்சி.. வாடிவாசல் பாட்டு எப்படி இருக்கு?
சென்னை: தி லெஜண்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மொசலு மொசலு பாடலில் யாஷிகா ஆனந்த் ஆட்டம் போட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள செகண்ட் சிங்கிளான வாடிவாசல் வாடி பாடலில் ராய் லக்ஷ்மி குத்தாட்டம் போட்டுள்ளார்.
ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது தி லெஜண்ட் திரைப்படம்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான முதல் பாடல் ஹிட் அடித்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள இரண்டாம் பாடலான வாடிவாசல் எப்படி இருக்கு? என்பதை இங்கே பார்ப்போம்..
காதல் விவகாரத்தில் ஒருவழியாக மாட்டிக் கொண்ட கோபி... அடுத்தடுத்து பரபரப்பில் பாக்கியலட்சுமி தொடர்!
வாடிவாசல் வாடி
தி லெஜண்ட் படத்தின் செகண்ட் சிங்கிளான வாடிவாசல் வாடி பாடல் தற்போது வெளியாகி உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சினேகன் வரிகளில் பென்னி தயாள் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர். ராஜு சுந்தரம் மாஸ்டர் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். லெஜண்ட் சரவணன் மற்றும் ராய் லக்ஷ்மி இணைந்து செம குத்து குத்தி உள்ளனர்.
பாடல் எப்படி இருக்கு
முதல் பாடலான மொசலு மொசலு பாடலை போலவே இந்த பாடலும் கேட்க நல்லாவே இருக்கு. ஹாரிஸ் ஜெயராஜ் ஐ எம் பேக் என மார்தட்டி சொல்லும் அளவுக்கு அருமையான பாடல் வரிகளுடன் பாடலை கொடுத்துள்ளார். விஷுவலாக பார்க்கும் போது ராய் லக்ஷ்மியின் நடனம் சர்ப்ரைஸாக ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. திருவிழா செட் மற்றும் சக நடனக் கலைஞர்கள் என அனைவருமே கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
ராய் லக்ஷ்மி அசத்தல்
நடிகை ராய் லக்ஷ்மியின் குத்தாட்டம் வேறலெவலில் பாடலுக்கு வலிமையை சேர்க்கிறது. செம கலர்புல்லாக இந்த பாடலையும் முடிந்த வரை ஹிட்டாக்கி விட வேண்டும் என்கிற முயற்சியில் மெனக்கெட்டு எடுத்துள்ளனர். இன்னும் அடுத்தடுத்த பாடல்களில் எல்லாம் எந்த எந்த நடிகைகள் வரப்போகின்றனர் என்றும் ஊர்வசி ரவுத்தேலாவை எப்ப அண்ணாச்சி காட்டுவீங்க என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அண்ணாச்சி மேக்கப்
செக்க செக்க செகப்பி என ராகவா லாரன்ஸ் வர்ணித்து பாடிய ராய் லக்க்ஷ்மியின் கலரே டல் ஆகும் அளவுக்கு மேக்கப்பில் குளித்து வந்தது போல அவ்வளவு டால் அடிக்கிறாரு லெஜண்ட் சரவணன். முடிந்த வரை கஷ்டப்பட்டு ஸ்டெப்ஸ் போட்டு நடனமாடி உள்ளார். ஆனால், அவரது நடனம் அந்த அளவுக்கு ரசிக்கும்படியாக இல்லை என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
எல்லாத்தையும் இங்கேயே காட்டிட்டா
லிரிக் வீடியோவாக ரிலீஸ் செய்யாமல் முழு வீடியோ பாடலையும் இங்கேயே காட்டிட்டா அப்புறம் தியேட்டருக்கு எதை பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவில் இதையெல்லாம் காட்டலாமே? என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.