twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் பாடல் அப்பாசுக்கு..கடைசி பாடல் அண்ணாச்சிக்கு..மறைந்த பாடகர் கேகேவும் தமிழ் பாடல்களும்

    |

    கொல்கத்தா : தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகர் 'கேகே' மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 53.

    Recommended Video

    Singer KK Passed Away | மேடையில் பாடி முடித்ததும் பிரிந்த உயிர் | #India

    கேகேவின் மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பிரபலங்கள் பாடகர் கேகேவின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    தமிழில் 50க்கும் மேற்பட்ட பாடல்களையும், 3,500க்கும் மேற்பட்ட விளம்பர பாடல்களையும் பாடியும். இவர் கடைசியாக தி லெஜண்ட் படத்திலும் இரு பாடல்களை பாடியுள்ளார்.

    பாடகர் கேகே மரணத்தில் மர்மம்? பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட உடல்.. பரிதவிப்பில் குடும்பம்!பாடகர் கேகே மரணத்தில் மர்மம்? பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட உடல்.. பரிதவிப்பில் குடும்பம்!

    கிருஷ்ணகுமார் குன்னத்

    கிருஷ்ணகுமார் குன்னத்

    பிரபல பின்னணி பாடகர் கே.கே.,என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத். டில்லியைச் சேர்ந்த இவர் . தமிழ், தெலுங்கு, ஹிந்தி கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் பல பாடல்கள் பாடியுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர்.

    உயிரிழந்தார்

    உயிரிழந்தார்

    நேற்று மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உற்சாகமாக பாடிக்கொண்டு இருந்தார். நிகழ்ச்சியில் பாடல்களை பாடி முடித்துவிட்டு மேடையிலிருந்து இறங்கிய இவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

    பிரதமர் இரங்கல்

    பிரதமர் இரங்கல்

    மறைந்த பாடகருக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், கேகே என்று அழைக்கப்படும் பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிக்கிறது. அவரது பாடல்கள் அனைத்து வயதினரையும் கவர்ந்த பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்தன. அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.

    பல ஹிட்பாடல்கள்

    பல ஹிட்பாடல்கள்

    பல மொழிகளில் பாடும் வல்லமை பெற்ற கேகே, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தின் 'அன்கோன் மே தெரி', தடப் தடப் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஹம் தில் தே சுகே சனம்‘ போன்ற ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

    தி லெஜண்ட் படத்தில்

    தி லெஜண்ட் படத்தில்

    செல்வராகவன் இயக்கத்தில் உருவான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் வரும் நினைத்து நினைத்துப் பார்த்தேன் என்ற மெகா ஹிட் பாடலை பாடி இளைஞர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். சரவணா ஸ்டோஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடிக்கும் தி லெஜண்ட் திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.

     ஆரம்பம் அப்பாசுக்கு..கடைசி பாடல் அண்ணாச்சிக்கு

    ஆரம்பம் அப்பாசுக்கு..கடைசி பாடல் அண்ணாச்சிக்கு

    மறைந்த பாடகர் கேகேவை பின்னணி பாடகராக அறிமுகப்படுத்தியது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் படத்தின் தமிழ், இந்தி படங்கள் மூலம் அறிமுகப்படுத்தினார். அதில் கல்லூரி சாலை, ஹலோ டாக்டர் என்கிற 2 பாடல்களை கே.கே பாடினார். அவருடைய குழைவான குரல் இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்தது. தமிழில் அறிமுகமாகி 11 மொழிகளில் பாடி புகழ்பெற்ற கேகேயின் கடைசி பாடலும் தமிழ் பட பாடலே அண்ணாச்சி சரவணா அருள் நடிப்பில் தி லெஜண்ட் படத்தில் 2 பாடல்களை பாடியுள்ளார். ஆரம்பம் அப்பாஸ், முடிந்தது அண்ணாச்சி பட பாடல் என ஒருவித ஒற்றுமை சோகத்தை ஏற்படுத்துகிறது.

    English summary
    Play back singer krishnakumar kunnath, krishnakumar kunnath passed away, krishnakumar kunnath dies, krishnakumar kunnath heart attack, The Legend’ Movie singer,
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X