உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக.. 5 மொழிகள்.. 2500 திரையரங்குகளில் வெளியாகும் தி லெஜண்ட்!
சென்னை : லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தி லெஜண்ட். இந்தப் படத்தை அவரே தயாரித்துள்ளார்.
இந்தப் படம் வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
படத்தை ஜேடி -ஜெர்ரி இயக்கியுள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

நடிகர் லெஜண்ட் சரவணன்
லெஜண்ட் சரவணன் அதிரடி நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் தி லெஜண்ட். ஜேடி -ஜெர்ரி இயக்கத்தில் இந்தப் படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அதிகமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

5 மொழிகளில் ரிலீஸ்
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக படம் வெளியாகவுள்ளது. சர்வதேச அளவில் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை லெஜண்ட் சரவணனே தயாரித்துள்ளார். இதன்மூலம் தயாரிப்பிலும் அவர் கால் பதித்துள்ளார். படத்தின் பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளன.

வரவேற்பை பெற்ற பாடல்கள்
படத்தின் ட்ரைலர் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து மொசலோ மொசலு, வாடிவாசல் உள்ளிட்ட பாடல்களும் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றன. பல மில்லியன் பார்வைகளை இவை யூடியூபில் பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான பொ பொ பொ பாடலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கமர்ஷியல் படம்
தன்னுடைய முதல் படத்திலேயே தான் உண்மையில் ஒரு லெஜண்ட் தான் என்பதை நிரூபித்துள்ளார் சரவணன். எமோஷன், காமெடி, ஆக்ஷன், காதல் என கமர்ஷியல் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் அனைத்து தரப்பு ஆடியன்சையும் கண்டிப்பாக கவரும் என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் சரவணன்
பல வெற்றிப் படங்களை விநியோகித்துவரும் கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளார். இதற்காக அதிகமான கோடிகள் கைமாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் சரவணன் இணைகிறார் என்று அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 800 திரையரங்குகள்
தமிழகத்தில் மட்டுமே இந்தப் படம் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் மட்டுமில்லாமல், ஆந்திரா, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை முன்னணி நிறுவனங்கள் பெற்றுள்ளன.

உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக சரவணன்
முதல் படத்திலேயே அதிகப்பணம் கொடுத்து விநியோக உரிமையை பெற்ற படம், மற்றும் உலகளவில் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் படம் என பல்வேறு பாராட்டுக்களை இந்தப் படம் பெற்றுள்ளது. உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இணையான வரவேற்பை இந்தப்படம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











