twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    5 மொழிகள்..2500 தியேட்டர்கள்..தட்டி தூக்க போகும் “தி லெஜண்ட்“..மாஸ் என்ட்ரினா இதுதான்!

    |

    சென்னை : லெஜண்ட் சரவணன் நடிக்கும் தி லெஜண்ட் திரைப்படம் வரும் 28ந் தேதி உலகம் முழுவதும் 2500 க்கும் அதிகமான திரையரங்குகளில் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

    Recommended Video

    அசத்தும் The Legend Saravana அண்ணாச்சி! 800 தியேட்டர்களில் Release *Kollywood | Filmibeat Tamil

    பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    16 திருப்பங்கள்.. 4 மணிநேரங்கள்.. செரும்பருத்தி தொடரோட க்ளைமாக்ஸ் எப்படி இருக்கப் போகுது தெரியுமா! 16 திருப்பங்கள்.. 4 மணிநேரங்கள்.. செரும்பருத்தி தொடரோட க்ளைமாக்ஸ் எப்படி இருக்கப் போகுது தெரியுமா!

    லெஜண்ட் சரவணன்

    லெஜண்ட் சரவணன்

    சரவணா ஸ்டோர் கடையின் உரிமையாளரான தி லெஜண்ட் சரவணன் விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகை வந்தாலும், நடிகைகளுடன் கலர் புல்லாக வந்து ஆட்டம் போட்டு லைக்குகளை அள்ளிவிட்டார். ஆரம்பத்தில் யாருப்பா இவரு என கேட்டவர்களையே.. தனது வித்தியாசமான ஸ்டைலால் கவர் செய்து விட்டார் தி லெஜண்ட்

    ஹீரோவாக

    ஹீரோவாக

    ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ள தி லெஜண்ட் திரைப்படத்தில் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை உர்வசி ரவ்தெலா நடித்திருக்கிறார். மேலும், விவேக், பிரபு, யோகிபாபு, நாசர், மயில்சாமி, பழம் பெரும் நடிகை சச்சு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் சாதனை படைத்து வருகிறது.

    லெஜண்ட் கதை

    லெஜண்ட் கதை

    லெஜெண்ட் படத்தில் சைன்டிஸ்ட் கேரக்டரில் சரவணன் நடித்திருக்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகள், காதல், சென்டிமென்ட் உள்ளிட்டவை அடங்கிய கமர்ஷியல் படமாக தி லெஜண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண மனிதன் தன் கடுமையான உழைப்பால் எப்படி லெஜெண்ட்டாகிறார் என்பது தான் படத்தின் கதை.

    5 மொழிகளில்

    5 மொழிகளில்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றி படங்களை தமிழகம் எங்கும் விநியோகம் செய்து ராசியான விநியோகஸ்தர் என பெயர் எடுத்த கோபுரம் சினிமாஸ் ஜி என் அன்புச்செழியன், 'தி லெஜண்ட்' படத்தை பார்த்து பாராட்டி, அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார். மேலும், பல முன்னணி நடிகர்களே இப்போதுதான் பான் இந்திய படங்களில் நடித்து வரும் நிலையில், முதல் படத்திலேயே தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பான் இந்திய திரைப்படமாக 'தி லெஜெண்ட்' படம் வெளியாக உள்ளது.

    2500 தியேட்டர்களில்

    தமிழகத்தில் மட்டும் 800 திரையரங்கிலும், உலகம் முழுவதும் 2500 திரையரங்கிலும் படம் வெளியாக உள்ளது. டிரைலர், பாடல் அனைத்து யூடியூபில் பட்டையை கிளப்பி வருவதால், இப்படத்தை பார்க்க ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர். தி லெஜண்ட் சரவணன் படத்தில் நடிக்கிறார் என்றதும் எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என விமர்சனம் செய்த அனைவருக்கும் "விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்" என நச்சுனு பதில் கொடுத்து மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பிடித்தமானவராக மாறிவிட்டார் திலெஜெண்ட் சரவணன்.

    English summary
    The legend Movie to release in five languages in more than 2500 theatres worldwide
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X