twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிரெண்டிங்கில் தி லெஜண்ட் டிரைலர்.. விமர்சகர்களுக்கு வாழ்த்துகள் சொன்னதுக்கு காரணம் இப்போ புரியுதா?

    |

    சென்னை : சரவணனின் நடிப்பில் வெளிவரவும் தி லெஜண்ட் படத்தின் டிரைலர் வெளியான 48 மணி நேரத்திற்குள்ளாக 10 மில்லியன் வியூஸ்களைக் கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்திற்கு சென்றுள்ளது.

    தி லெஜண்ட் திரைப்படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌத்தலா நடித்துள்ளார். மேலும், பிரபு, நாசர், தம்பி ராமையா, விஜயகுமார், மறைந்த நடிகர் விவேக், யோகிபாபு, சச்சு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்.

    தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் இப்படத்தை தயாரித்து வருகிறது.

     நானும் ரவுடிதான் படத்தில் அனிருத் ஹீரோவாக நடிக்காமல் போனதற்கு காரணம் இதுதான்.. விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தில் அனிருத் ஹீரோவாக நடிக்காமல் போனதற்கு காரணம் இதுதான்.. விக்னேஷ் சிவன்

    'தி லெஜண்ட்'

    'தி லெஜண்ட்'

    லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன், விளம்பரங்களில் நடித்து கவனம் ஈர்த்து வந்தார். அவர் நடிப்பில் 'தி லெஜண்ட்' என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளது. ஜே. டி - ஜெரி இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளா

    டிரைலர் ரிலீஸ்

    டிரைலர் ரிலீஸ்

    இந்நிலையில், தி லெஜண்ட் திரைப்படத்தின் டிரைலர் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. 3.34 நிமிடங்கள் இந்த படத்தின் டிரைலர் நீளமாக இருந்தது. இவ்வளவு பெரிய டிரைலர் எதுக்கு என்றும், டிரைலரின் நீளத்தை இன்னும் குறைத்து இருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்தனர். மேலும். டிரைலரை பார்க்கும் போது வெளிநாட்டில் படித்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு வரும் விஞ்ஞானியாக சரவணன் அருள் நடித்திருப்பது தெரிகிறது.

    வைரலான டிரைலர

    வைரலான டிரைலர

    ஆக்ஷன்,காதல்,ரொமான்ஸ் என அனைத்தையும் பார்க்கும் போது, ரஜினி நடித்த சிவாஜி படத்தின் சாயல் இருப்பதாக பலவிதமான தகவல்கள் பரவின. ஆனால், ஞாயிற்றுக்கிழமை வெளியான படத்தின் டிரைலர 48 மணி நேரத்திற்குள்ளாக 10 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் கடந்துள்ளது. மேலும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளதால், தி லெஜண்ட் படத்தின் டிரைலரை பெரும்பாலானோர் ரசித்துள்ளார் என்பது தெரிகிறது.

    ரஜினி தான் ரோல் மாடல்

    ரஜினி தான் ரோல் மாடல்

    தி லெஜண்ட் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சரவணன் அருள், ரஜினி, விஜய் தான் தனது ரோல் மாடல் என்றார். மேலும், இந்த படத்தின் வெற்றிதான் அடுத்த படத்திற்கான விதையாக இருக்கும் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு அழகாக பதிலளித்திருந்தார். குறிப்பாக விமர்சனம் செய்பவர்களுக்கு வாழ்த்துக்கள் என கூறியிருந்தார். இது நெட்டிசன்களை நிச்சயம் கவர்ந்து இருக்கும் என்று நம்பப்படுகிறது.

    சொந்த குரலில்

    சொந்த குரலில்

    தமிழ் சினிமாவில் எத்தனையோ முன்னணி நடிகர்கள் தனது சொந்த குரலில் பேசாத நிலையில், சரவணன் அருள் தனது முதல் படத்திலேயே சொந்த குரலில் பேசி உள்ளது பாராட்டுக்குரியதாக பார்க்கப்படுகிறது. சண்டை காட்சிகள், நடனம், ரொமான்ஸ் என அனைத்திலும் கடுமையாக உழைத்து இருப்பதை டிரைலரில் பார்க்க முடிகிறது என தி லெஜண்ட் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் இப்போதிலிருந்து வரத் தொடங்கி உள்ளன.

    English summary
    The Legend movie trailer crossed 10m views in youtube
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X