“தி லெஜண்ட்“ திருவிழா.. ஜூலை 28ஆம் தேதி விடுமுறை..அண்ணாச்சி படத்திற்கு அடித்தது ஜாக்பாட்!

சென்னை : தி லெஜண்ட் திரைப்படம் வெளியாக உள்ள ஜூலை 28 அன்று சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளதால் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது கடை விளம்பரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் லெஜண்ட் சரவணன்.

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தனது கடை விளம்பரத்தில் முன்னணி நடிகைகள் பலருடன் இணைந்து நடனமாடி விளம்பரத்தை ஹிட்டாக்கிய சரவணன், சிநேகா முதல் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் ஆட்டம் போட்டுள்ளார்.

லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணன்

விளம்பரத்தில் நடித்து தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய லெஜண்ட் சரவணன் தற்போது சினிமாவில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். இதில், அஜித் விக்ரம் நடிப்பில் உல்லாசம் படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள லெஜண்ட் படத்தில் நடித்துள்ளார். ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

இப்படத்தில், லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரௌதாலா நடித்துள்ளார். மேலும், நடிகர் விவேக், மயில்சாமி, சுமன், பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, தம்பி ராமையா, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யாஷிகா ஆனந்த் மற்றும் ராய் லட்சுமி ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி உள்ளனர்.

அதிகாலை சிறப்பு காட்சி

அதிகாலை சிறப்பு காட்சி

இந்த படத்தை பிரபல சினிமா விநியோகஸ்தர் மதுரை அன்புச்செழியன் வெளியிடுகிறார். இந்த படத்திற்காக தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 2500க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாக உள்ளது. மேலும், முன்னணி நடிகர்களின் படத்தைப் போலவே 28ந் தேதி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சியாக படம் வெளியாக உள்ளது.

5 மொழிகளில்

5 மொழிகளில்

வெளிநாட்டில் படித்த விட்டு சொந்த ஊருக்கு நல்லது செய்ய வரும் விஞ்ஞானியாக லெஜண்ட் சரவணன் நடித்துள்ளனர். முதல் படத்திலேயே லெஜண்ட் சரவணன் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். லெஜண்ட் படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளிலும் வெளியாக உள்ளது.

ஜூலை 28ந் தேதி விடுமுறை

ஜூலை 28ந் தேதி விடுமுறை

இந்நிலையில், மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற உள்ளதால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஜூலை 28ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறை தினத்தில் தி லெஜண்ட் திரைப்படம் வெளியாவதால், படத்திற்கு நல்ல வரறேப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X