தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி விரைவில் வெள்ளித்திரையில்....!

சென்னை: தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி விரைவில் பெரிய திரையில் நாம் கண்டு மகிழ நடிக்க உள்ளார்.

அண்மை காலமாகவே தி லெஜண்ட் அண்ணாச்சி படத்தில் நடிக்க உள்ளார் என்று அவ்வப்போது வதந்திகள் பரவிக்கொண்டு இருந்தது.

ஆனால், இதற்கு சரியான பதில் இல்லாமல் இருந்தது. அண்ணாச்சி தரப்பில் எந்தவித ரியாக்ஷனும் இல்லை.

விளம்பரத்தில் மட்டும்

விளம்பரத்தில் மட்டும்

எதுவும் பேசாமல் விளம்பர படங்களில் மட்டுமே நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால்.. இப்போ அந்த காலம் மலை ஏறிப்போச்சு. தானும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ள நிலையில், இதை ஜேடி-ஜெர்ரி இயக்க உள்ளனர்.

சூப்பர் பெயர்

சூப்பர் பெயர்

படத்தின் பெயர் சூப்பரா செலக்ட் பண்ணி இருக்காங்க. .தி லெஜண்ட் என்பதுதான் படத்தின் பெயராம். படத்தில் கமர்ஷியல் இருந்தாலும் சமூகத்துக்கு ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் எண்பதில் மிகத் தீவிரமாக இருக்காராம் அண்ணாச்சி.

கேலி மீம்ஸ்

கேலி மீம்ஸ்

கேலி மீம்ஸ் போட்டு மக்கள் தாக்கினாலும் கண்டு கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் விளம்பரப் படங்களில் நடித்து வந்த அண்ணாச்சிக்கு படத்தில் நடிப்பது என்றவுடன்...கத்துக்க வேண்டியதை முறையா கத்துக்கிட்டு நடிச்சால் நல்லா இருக்கும் என்று எண்ணம் வந்ததாம். அதனால்.. வீட்டிலேயே எல்லாத்துக்கும் பயிற்சி நடக்குதாம்.

மும்பை இசை

மும்பை இசை

மும்பையில் இருந்து இசை அமைப்பாளர், காஸ்ட்லியான டெக்னீஷியன்ஸ் என்று, படத்தை முதல் தர லெவலுக்கு கொண்டு போக எல்லா தரத்தில் இருந்தும் காய் நகர்த்துகிறாராம் அண்ணாச்சி. கதாநாயகி தேர்வும் அப்படித்தான் நடக்கிறது என்கிறார்கள்.

கலக்குங்க அண்ணாச்சி.. பைட் சீன்லாம் பிச்சு உதறுங்க.. டான்ஸ் வேற லெவல்ல இருக்கட்டும்.. பன்ச் வசனம் பேசி பட்டையைக் கிளப்புங்க.. ரசிகர்கள் இப்பவே மரண வெயிட்டிங்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X