கப்பல் மாதிரி இருக்கேப்பா.. லெஜண்ட் சரவணன் வீட்டைப் பாருங்க.. பலநூறு கோடிகள் மதிப்பு?

சென்னை: தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தி லெஜண்ட் சரவணன். இவர் தி லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர். சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் தனது தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நடத்தி வருகிறார். அவரது பூர்வீக ஊரில் அவரது வீடு எப்படி கட்டப்பட்டுள்ளது என்று யூடியூபர்கள் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன். இவர் தனது கடை விளம்பரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். அதன் பின்னர் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார்.இவரது முதல் படம் தி லெஜண்ட். இந்த படத்தை தனது கடை விளம்பரத்தை இயக்கிய ஜேடி- ஜெர்ரி இயக்கி இருந்தார். படத்திற்கு பெரிய அளவில் புரோமோசன் செய்யப்பட்டது. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார்.

The Legend Saravanan Native Village 100 Cr Worth House Outdoor Video Goes Trending

லெஜண்ட் சரவணன் வீடு: தி லெஜண்ட் சரவணன் என்றாலே பிரம்மாண்டம் என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு அவர் வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும்போது அவரது பூர்வீக ஊரில் கப்பல் போல பிரமாண்டமான வீட்டைக் கட்டி எழுப்பி உள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணிக்க நாடார் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள அவரது வீட்டை யூடியூபர்கள் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வெளிப்புற வீடியோ: வீட்டின் மதில் சுவரிலேயே தி லெஜண்ட் சரவணன் என்றும் சரவணா ஸ்டோர்ஸ் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் அந்த பிரமாண்டமான கட்டிடத்தின் வெளிப்புறம் தான் காட்டப்படுகிறது. அதே நேரத்தில் வீடியோவை பார்க்கும்போது, அது அவரது வீடா இல்லை அவரது அலுவலகமா என்ற சந்தேகமும் வருகிறது. ஆனால் அது வீடுதான் என்றும், வீட்டின் மதிப்பு மட்டும் நூறு கோடிகளுக்கு மேல் வரும் என்றும் கூறப்படுகிறது.

நூறு கோடிகள்: அதாவது, வீட்டின் ஒவ்வொரு பகுதியும் லெஜண்ட் சரவணனின் மேற்பார்வையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூலப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சில பொருட்கள் வெளிநாட்டில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு வீட்டின் உள் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X