லெஜெண்ட் சரவணனின் அடுத்த படத்தின் பெயர் என்ன தெரியுமா? விஜய்க்கே டஃப் கொடுப்பாரு போலயே!

சென்னை: தயாரிப்பாளர், நடிகர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் டைட்டில் என்னவென்று பல மாதங்களாக வெளியிடாமல் இருந்த நிலையில் படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது படத்தின் டைட்டிலை விக்கிரமராஜா வெளியிட்டார். படத்திற்கு லீடர் என்று வைக்கப்பட்டுள்ளது. இதைப்[ பார்த்த பலரும் இது விஜய் படத்தின் தலைவா பட டைட்டிலை விட ஷார்ப்பாக இருக்கிறதே என்று விமர்சித்து வருகிறார்கள்.

The Legend Saravanan Next Movie Title Leader Which Attracts Mass

தி லெஜெண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கியவர் தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன். இவரது முதல் படமே திரைத்துறையில் பெரும் கவனத்தை ஈர்த்தது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு இருந்தது. படத்தில் இரண்டு நாயகிகளும் இவருடன் நடித்திருந்தனர். படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றது.

இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்து உருவாகி உள்ள லீடர் படம் பக்கா கமர்ஷியல் படமாகவும் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கு பிடித்த படமாகவும் இருக்கும் என்று லெஜெண்ட் சரவணன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதே போல் இவரது இரண்டாவது படத்தின் டைட்டில் டீசரை படக்குழு இன்று அதாவது பிப்ரவரி 4ஆம் தேதி வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், பலரும் டைட்டில் டீசரை பாராட்டி வருகிறார்கள். ஆக்‌ஷன் காட்சிகளில் லெஜெண்ட் சரவணன் மிகவும் சிறப்பாக இருப்பதாக பலரும் பாராட்டி விமர்சித்து வருகிறார்கள்.

பஞ்ச் டயலாக்குகள்: லீடர் படத்தை துரை செந்தில் குமார் இயக்கி உள்ளார். ஜிப்ரான் படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பாக படக்குழு இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் டைட்டில் டீசர் ஏற்படுத்தி உள்ள ஆர்வம் படம் எப்படியும் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டைட்டில் டீசரில் எல்லா அப்பாவும் தன் குழந்தைகளுக்கு ஹீரோ தான் டா என்று சரவணன் சொல்வது போலவும், அவரது குழந்தை டைட்டில் டீசரின் கடைசியில் இந்த ஃபிளேவர் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று சொல்வது எல்லாம் பக்காவான மாஸ் சினிமா டயலாக்குகளாக உள்ளது.

ரிலீஸ் தேதி: படத்தின் அப்டேட்களைப் பொறுத்தவரையில் படத்தின் முதல் பாடலை வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடுவதாகவும், மார்ச் மாதம் 6ஆம் தேதி படத்தின் டிரைலரை வெளியிடவும் ஏப்ரல் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு தீவிரமாக வேலை செய்து வருவதாக நாயகன் லெஜெண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார். படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளாதால், பாடல்கள் மீதும் ரசிகர்களுக்கு தனி ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X