அண்ணாத்த, வலிமை பட பாடல்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய அண்ணாச்சி.. என்ன இப்படி ஆகிடுச்சே!

சென்னை: தி லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி முதல் முறையாக சினிமாவில் அறிமுகமாகவுள்ள தி லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற போகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்துள்ளார்.

அவரது இசையில் உருவான வாடி வாசல் பாடல் அஜித்தின் வலிமை மற்றும் ரஜினிகாந்தின் அண்ணாத்த படங்களின் ஓப்பனிங் சாங் ரெக்கார்ட்டுகளை அடித்து நொறுக்கி இருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாச்சியின் ஆடியோ லாஞ்ச்

அண்ணாச்சியின் ஆடியோ லாஞ்ச்

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தி லெஜண்ட் எனும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். பிரம்மாண்ட் பொருட்செலவில் இந்த படத்தை இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி உருவாக்கி உள்ளனர். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற போகிறது.

10 ஹீரோயின்கள்

10 ஹீரோயின்கள்

பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, யாஷிகா ஆனந்த், ஷ்ரத்தா ஸ்ரீநாத், நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி, ஸ்ரீலீலா மற்றும் தி லெஜண்ட் படத்தின் ஹீரோயினான பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா என மொத்தம் 10 ஹீரோயின்கள் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளனர். தி லெஜண்ட் படத்தின் பாடலுக்கும் அவர்கள் ஆடிப் பாடி நடனமாடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

15 மில்லியன் வியூஸ்

15 மில்லியன் வியூஸ்

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லெஜண்ட் சரவணா மற்றும் ராய் லக்‌ஷ்மி நடனமாடிய ஓப்பனிங் பாடலான வாடி வாசல் வாடி பாடல் சமீபத்தில் வெளியாகி 15 மில்லியன் வியூஸை அள்ளி அட்டகாசம் செய்துள்ளது. மேலும், முன்னணி நடிகர்கள் பலரின் பாடல் சாதனைகளை முறியடித்து இருப்பது தான் இதில் ஹைலைட்டே என ரசிகர்கள் கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

அண்ணாத்த அண்ணாத்த

அண்ணாத்த அண்ணாத்த

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் ஓப்பனிங் பாடலான அண்ணாத்த அண்ணாத்த பாடலை மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருந்தார். அந்த பாடலின் வீடியோ இதுவரை 13 மில்லியன் வியூஸ் மட்டுமே அள்ளி இருக்கிறது.

வலிமையும் காலி

வலிமையும் காலி

எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த வலிமை படத்தின் ஓப்பனிங் பாடலான "நாங்க வேறமாறி" பாடல் வீடியோவும் 13 மில்லியன் வியூஸ் மட்டுமே எடுத்துள்ள நிலையில், அந்த ரெக்கார்ட்டையும் சேர்த்தே அண்ணாச்சி அடித்து நொறுக்கி உள்ளது ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X