ரஜினி, அஜித்தின் சாதனை...அசால்டாக அடித்து நொருக்கிய அண்ணாச்சியின் தி லெஜண்ட்

சென்னை : ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் செய்த சாதனையை லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் தி லெஜண்ட் படம் அசால்டாக அடித்து நெருக்கி உள்ளது.

The Legend trailer breaks Rajini, Ajiths movie trailer record

தனது கடைகளின் விளம்பரங்களில், டாப் ஹீரோயின்களுடன் நடனமாடி அனைவரிடமும் பிரபலமானவர் சரவணன். விளம்பர படங்களிலேயே தன்னை பற்றி அதிகம் பேச வைத்தவர். தற்போது தி லெஜண்ட் படத்தின் மூலம் தானே தயாரிப்பாளராகவும், ஹீரோவாகவும் அறிமுகமாகி உள்ளார்.

லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி ஹீரோவாக அறிமுகமாகும் தி லெஜண்ட் படத்தை, உல்லாசம், விசில் படங்களை இயக்கிய ஜேடி- ஜெர்ரி இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. தி லெஜண்ட் படத்தின் டிரைலர் யூட்யூப்பில் இதுவரை 26 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

ரஜினி நடித்த அண்ணாத்த, அஜித் நடித்த வலிமை படங்களின் டிரைலர் பெற்ற பார்வைகளை விட தி லெஜண்ட் படம் அதிக பார்வைகளை பெற்றுள்ளது. அண்ணாத்த படம் 16 மில்லியன் பார்வைகளையும், வலிமை படம் 24 மில்லியன் பார்வைகளையும் பெற்றது. சமீபத்தில் ரிலீசான பெரிய நடிகர்களின் படங்களில் விஜய்யின் பீஸ்ட் டிரைலர் 56 மில்லியன் பார்வைகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து கமலின் விக்ரம் பட டிரைலர் 33 மில்லியன் பார்வைகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. தி லெஜண்ட் பட டிரைலர் விரைவில் விக்ரம் படத்தின் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பீஸ்ட் படத்தின் சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தி லெஜண்ட் படம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பட ரிலீசுக்கு முன்பு எப்படியும் விக்ரம் படத்தின் டிரைலர் சாதனையை தி லெஜண்ட் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X