twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆடி பொறந்துட்டாலே மாரியம்மன் கோவில்களில் ஒலிக்கும் எல்.ஆர் ஈஸ்வரியின் குரல்

    |

    சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பிறந்த உடனே நினைவுக்கு வருவது, அம்மன் கோவில்களும், அங்கு பாடப்படும் எர்.ஆர்.ஈஸ்வரியின் பக்திப் பாடல்களும் தான். தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் இவருடைய பாடல்கள் தான் நம்முடைய காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

    அதிலும் குறிப்பாக இவர் பாடிய மாரியம்மா எங்கள் மாரியம்மா என்ற பாடல் தான் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கும். கிராம திருவிழா காலங்களில் இவர் பாடிய வரமளித்து உலகை எல்லாம் வாழவைக்க வந்தவளே என்ற கணீர் குரலைக் கேட்டாலே, திருவிழா களைகட்ட ஆரம்பித்துவிட்டது எனலாம். எப்படி மக்களுக்கு இத்தனை வருஷம் ஆனாலும் எல்லார் ஈஸ்வரி மறக்க முடியல அப்படிங்கற சிறப்பு தொகுப்பு தான் இந்த எல்லார் ஈஸ்வரி பற்றிய தகவல்.

    The Legendary of Playback singer L.R.Eswari

    ஆடி மாதம் என்றாலே நமக்கு அம்மன் - அம்மன் கோயில்கள் மக்களுடைய பூஜை இதெல்லாம் ஞாபகம் வரும் இது மட்டுமில்லாம LR ஈஸ்வரியை மறக்கவே முடியாது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் வரும் போது அனைத்து அம்மன் கோயில்ளிலும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாட்டு மட்டும் தான் காதில் ஒலிக்கும்.

    எல். ஆர். ஈஸ்வரி (பிறப்பு: திசம்பர் 7, 1939) தமிழ்நாட்டின் பிரபலமான ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகி. 1958ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார்.

    பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோனி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா தம்பதிக்கு சென்னையில் 1939ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி பிறந்தார் லூர்துமேரி ராஜேஸ்வரி என்ற எல்.ஆர்.ஈஸ்வரி. இவரது தாயார் எம்.ஆர்.நிர்மலா ஜெமினி ஸ்டூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர்.

    எல்.ஆர்.ஈஸ்வரி எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே தந்தை இறந்து விட்டார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல்.ஆர்.அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உண்டு.

    எல்.ஆர்.ஈஸ்வரி முதன்முதலில் மனோகரா (1954) படத்திற்காக எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைப்பில் இன்ப நாளிலே இதயம் பாடுதே என்ற பாடலை ஜிக்கி குழுவினருடன் இணைந்து பாடினர். அப்பாடலில் தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் குழுவினருடன் சேர்ந்து பாடினார். அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார்.

    முதன் முதலில் தனியாகப் பாடும் சந்தர்ப்பம் நல்ல இடத்துச் சம்பந்தம் (1958) என்ற திரைப்படத்துக்காக கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் இவரே தான் அவரே அவரே தான் இவரே என்ற பாடலைப் பாடினார். இதுவே இவரது முதல் பாடலாகும். {பொண்ணு மாப்பிளே ஒன்னாப் போகுது ஜிகு ஜிகு வண்டியிலே}. இந்தப்படத்தில் ஈஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.

    இதனையடுத்து 1959 இல் வெளிவந்த நாலு வேலி நிலம் படத்துக்காக திருச்சி லோகநாதனுடன் இணைந்து ஊரார் உறங்கையிலே என்ற பாடலைப் பாடினார். இதனையும் கே.வி.மகாதேவனே இசையமைத்திருந்தார். 1961ல் வெளிவந்த பாசமலர் திரைப்படத்தில் இவர் பாடிய வாராயென் தோழி வாராயோ என்ற பாடல் இவருக்கு மிகவும் புகழைத் தேடித்தந்த பாடல். இது இன்றைக்கும் கூட கிராமங்களில் நடக்கும் திருமண விழாக்களில் ஒலிக்கும் பாடலாகும்.

    கவியரசு கண்ணதாசனின் நடிப்பில் வெளிவந்த கருப்புப் பணம் படத்தில் இவர் பாடிய பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் என்ற பாடலும், எலந்தைப் பழம், முத்துக்குளிக்க வாரியளா போன்ற பாடல்களும் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்த ஏனைய பாடல்கள்.

    பிற்காலத்தில் இவர் துள்ளிசைப் பாடல்களையே நிறையப் பாடினார். எழுபதுகளின் பிற்பகுதியில் ஈஸ்வரிக்கு திரைப்பட வாய்ப்புக் குறைந்தது. இருந்தாலும் பக்திப் பாடல்களை திரைப்படங்களிலும், வெளியிலும் அதிகம் பாடி வந்தார். கவர்ச்சி குரல் குயிலாக அன்று முதல் இன்று வரை தனது திரை உலக வாழ்க்கையை தொடர்கிறார். தொடர்ந்து கொண்டே இருப்பார்.

    English summary
    Every year as soon as the month of Adi is born, it is the temples of Amman and the devotional songs of RR Eeswari that are sung there. Wherever we are going in Tamil Nadu, her songs will be heard in our ears.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X