Don't Miss!
- News
பிளந்த முதுகு.. அண்ணி அனுப்பின போட்டோ.. டான்ஸ் மாஸ்டர் ரமேஷை தேடி வந்த 4 பேர்.. கொலை? தற்கொலை? மர்மம்
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
Year Ender 2022 : அம்மான்னா சும்மா இல்லடா..இந்த ஆண்டு அம்மாவான நடிகைகளில் லிஸ்ட்!
சென்னை : 2022ம் ஆண்டு விடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டின் நடந்த சுவாரசியமான சம்பவங்களை Year Ender 2022ல் நாம் பார்த்து வருகிறோம்.
இந்த ஆண்டின் சிறந்த படங்கள், வசூலை வாரிக்குவித்த படங்கள், டாப் நடிகர், நடிகைகள், திரைப்பிரபலங்களின் திருமணங்கள், விவாகரத்துகள் என அனைத்தையும் நாம்பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், இந்த ஆண்டு அம்மாவான நடிகை யார் யார் என்று பார்க்கலாமா?

காஜல் அகர்வல்
நடிகை காஜல் அகர்வால் 2020ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சலு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என பெயர்வைத்துள்ளனர். குழந்தை பிறப்பிற்கு பிறகும் காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இரட்டை ஆண்குழந்தை
நீண்ட நாட்களாக காதலர்களாக வலம் வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதையடுத்து,அக்டோபர் 9ந் தேதி "நானும் நயனும் அம்மா அப்பாவாகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது" என பதிவிட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

கிருஷ்ணா ஆதித்யா,கியான் ராஜ்
தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த நடிகை நமிதா, 2017 ஆம் ஆண்டு காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பின கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை போட்டோஷூட் மூலம் அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தைக்கு தாயான நமிதா தனது குழந்தைகளுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என பெயர்கள் வைத்துள்ளார்.

அழகான பெண் குழந்தை
நடிகை பிரணிதா உதயம், சகுனி , மாஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர், கணவரின் பிறந்தநாளில் கர்ப்பமாக இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். அதையடுத்து, ஜூன் மாதம் இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பிறகும் தாறுமாறான போட்டோக்களை பதிவு செய்து வருகிறார்.

ஒரு மேஜிக்கல் பெண் குழந்தை அவள்
பாலிவுட் நடிகர்களான ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் ஆன இரண்டே மாதத்தில் கர்ப்பமான தகவலை வெளியிட்டார் ஆலியா. இதையடுத்து நவம்பர் மாதம் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியான தகவல் ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''எங்கள் வாழ்க்கையின் அற்புதமான செய்தி இது. ஒரு மேஜிக்கல் பெண் குழந்தை அவள்" என பதிவிட்டிருந்தார்.
-
நடை பயணத்தில் திடீரென மயங்கி விழுந்த நடிகர்... மாரடைப்பா என்ற அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்
-
உச்ச நடிகர் காது வரை சென்ற அந்த பட்டம் விஷயம்.. மாஸ் நடிகரின் நடவடிக்கையால் ரொம்ப அதிருப்தியாம்?
-
அதே 450 கோடி பட்ஜெட்... ஜெயம் ரவிக்கு பதிலாக சுந்தர் சி டிக் செய்த ஹீரோ... கரையேறுமா சங்கமித்ரா?