டிரெண்டிங்கை தெறிக்கவிடும் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் சீரிஸ் புதிய டீசர்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகளவில் ரசிகர்களை கவர்ந்த தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் படத்தின் புதிய சீரிஸான தி ரிங்ஸ் ஆஃப் பவர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக போகிறது.

அதன் அட்டகாசமான 2வது டீசர் வெளியாகி உலகளவில் டிரெண்டிங்கை தெறிக்கவிட்டு வருகிறது.

மாயாஜாலங்கள் நிறைந்த உலகில் நடக்கும் சண்டைக் காட்சிகளை பார்ப்பதற்கே ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த வெப்சீரிஸ்க்காக தவமாய் தவம் கிடந்து வருகின்றனர்.

தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்

தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்

இயக்குநர் பீட்டர் ஜாக்சன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் திரைப்படம் ஏகப்பட்ட பாகங்களாக வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையையும் ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளையும் அதிகளவில் குவித்துள்ளன. இந்நிலையில், அந்த கதைய தழுவி தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் எனும் புதிய வெப்சீர்ஸ் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் நேரடியாக வெளியாக போகிறது.

ஓடிடி ரிலீஸ் எப்போ

ஓடிடி ரிலீஸ் எப்போ

வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் வெப்சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸ் ஹெச்பிஓ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெற்றிகரமாக ஓடி உலகளவில் வசூல் ஈட்டிய நிலையில், அமேசான் பிரைம் அப்படியொரு படைப்பை கையில் எடுத்திருக்கிறது.

பிரம்மாண்ட டீசர்

பிரம்மாண்ட டீசர்

லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் படங்கள் எல்லாமே மாயாஜால காட்சிகளுக்கும் பிரம்மாண்ட செட்களுக்கும், சிஜிக்களும் சற்றும் பஞ்சமே இருக்காமல், பிரம்மாண்ட திரைக்கதையை ரசிகர்களுக்கு சொல்லி மிரட்டும். ஏற்கனவே முதல் டீசர் சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான நிலையில், அதன் 2.30 நிமிட புதிய டீசர் தற்போது வெளியாகி கதையின் ஆழத்தையும் காட்சிகளின் பிரம்மாண்டத்தையும் பார்வையளர்கள் முன்னிலையில், விரித்து எதிர்பார்ப்புகளை எகிற வைத்து இருக்கிறது.

நரக காட்சிகள்

கலாட்ரியலாக நடிகை மோரிஃபீல்ட் கிளார்க் நடித்துள்ளார். ராபர்ட் அராமாயோ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த வெப்சீரிஸில் நாயகி உன் கண்ணுக்கு அது தெரியாது என சொல்லும் போது தோன்றும் நரக காட்சிகள் டீசரில் வேற லெவல் மிரட்டலை ரசிகர்களுக்கு கொடுக்கின்றன. லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் ரசிகர்களுக்கும் ஹாலிவுட் ரசிகர்களுக்கும் வரும் செப்டம்பர் 2 முதல் செம விருந்து காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் இந்த வெப்சீரிஸ் ரிலீசாக போவது கூடுதல் தகவல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X