20 நாளா வீட்டுக்கு வரல.. காலையிலேயே லேசா வலி இருந்து இருக்கு.. கதறி அழும் பணிப்பெண்!

சென்னை: காலையிலேயே அவருக்கு லேசா வலி இருந்து இருக்கும்,ஆனால், சொல்லவில்லை என வீட்டில் வேலை செய்யும் பெண் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவர் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.

The maid cries over actor Marimuthus death

கதறி அழும் ரசிகர்கள்: அவரது உடல் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு சரத்குமார்,சூரி, ரவிமவுரியா, ரமேஷ் பிரபா, எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் பேரசு, இயக்குநர் பாண்டிய ராஜன் மற்றும் எதிர் நீச்சல் சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு கதறி அழுதனர்.

முதல்வர் இரங்கல்: மாரிமுத்துவின் மறைவுக்கு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும். திரைத்துறை நண்பர்களுக்கும், இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

நல்ல மனுஷன்: இந்நிலையில், மாரிமுத்து வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் பவானி அளித்துள்ள பேட்டியில், ஒரு நல்ல மனுஷனுக்கு இப்படியா நடக்கணும் என்று கதறி அழுதார். வீட்டில் அவர் இருந்தால் கலகலப்பாக பேசுவார், பொறுப்பா வேலை பாருனு எப்போதுமே சொல்லுவார். அதே போல, என் மகளின் திருமணத்திற்கு பணம்கொடுத்து உதவி செய்தார்.

The maid cries over actor Marimuthus death

20 நாளாக வீட்டுக்கே வரல: அவருக்கு ஏற்கனவே ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்து இருக்கு, அப்போது அவருக்கு சூர்யா மருத்துவமனையில் தான் ட்ரீட்மெண்ட் பாத்தாங்க. அவர் படப்பிடிப்புக்காக ஊருக்கு போய் இருந்தாரு, 20 நாளாக வீட்டுக்கே வரல, நேத்துத்தான் வீட்டுக்கு வந்தாரு. காலையில் வேலை இருக்குனு கிளம்பிடிட்டாரு, காலையிலேயே அவருக்கு வலி இருந்து இருக்கு ஆனால், சொல்லாமல் விட்டுவிட்டார். சினிமாவில் தான் அவர் வில்லன்போல இருப்பார். ஆனால், நிஜத்தில் அவர் ஒரு ஹீரோ தான். அவரது மரணசெய்தி கேட்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்துவிட்டேன் என்று பணிப்பெண் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X