காதலர் தின ஸ்பெஷல்...ஜி.வி.பிரகாஷின் பேச்சுலர் டீசர் வெளியீடு

சென்னை : காதலர் தினத்தை முன்னிட்டு ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை சதீஷ் செல்வகுமார் எழுதி, இயக்கி உள்ளார்.

The makers of Bachelor released the film’s teaser on the eve of Valentine’s Day

காதலர் தின விருந்தாக, காதலர் தின வாழ்த்துக்களுடன் இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. பேச்சுலர்களின் வாழ்க்கையை சொல்லுவதாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு பெண்ணை வெறித்தனமாக காதலிக்கும், அதே சமயம் அதனை வெளிகாட்ட தயங்கும் இளைஞராக ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.

ஐடி துறையில் பணியாற்றும் இளைஞரான ஜி.வி.பிரகாஷ், உடன் வேலை செய்யம் திவ்ய பாரதியை காதலிப்பது போன்றும், அவருடன் ரொமான்சாக இருக்கும் காட்சிகளும் டீசரில் இடம்பெற்றுள்ளது.

திவ்ய பாரதியிடம் காதலை சொல்ல மறுத்தாலும், அவரை விட்டு விலகாத இளைஞரான ஜி.பி.பிரகாஷிற்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக அந்த டீசர் முடிகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை வெளியிடப்படவில்லை.

ஆனால் நேற்று வெளியிடப்பட்ட இந்த டீசர் படத்தின் மீதான ஆர்வத்தை, குறிப்பாக இளைஞர்களிடம் அதிகரிக்க செய்துள்ளது. யூட்யூப்பில் வெளியிடப்பட்ட இந்த டீசரை இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ், செல்வராகவன், யுவன்சங்கர் ராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களின் ட்விட்டர் பக்கத்திலும் இந்த டீசரை பகிர்ந்துள்ளனர். வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் லட்சக்கணக்கான பார்வைகளையும், லைக்குகளையும் இந்த டீசர் அள்ளி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X