பிகினி உடை அணிய சொல்லி 6 மாசமா என்னை கன்வின்ஸ் பண்ணினாங்க..பிரபல நடிகையின் 'வின்னர்' பிளாஷ்பேக்!
சென்னை: பிகினி காட்சியில் நடிப்பதற்காக, படக்குழுவினர் தன்னை 6 மாதம் சமாதானப்படுத்தினர் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
Recommended Video
விக்ரம் நடித்த ஜெமினி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண்.
தொடர்ந்து அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், சரத்குமாரின் திவான், அரசு, சுந்தர். சி இயக்கத்தில் பிரஷாந்த் நடித்த வின்னர் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

சர்வர் சுந்தரம்
இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்து வந்த இவர், பிரபல இந்தி நடிகை ரவீணா டாண்டனின் உறவினர். தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பு வராததால் கேரக்டர் ரோலில் நடித்து வந்தார். கார்த்தியின் சகுனி, விஷாலின் ஆம்பள படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்த கிரண், சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கிளாமர் போட்டோ
இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களையும் டிக்டாக் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவின.
அவர் வெளியிட்டிருந்த கண்ணடிக்கும் வீடியோவும் வேகமாக பரவியது.

கண்திறந்து பார்த்தாய்
அவர் நடித்த 'வின்னர்' படத்தில் இடம்பெறும், எந்தன் உயிர் தோழியே கண்திறந்து பார்த்தாய் என்ற பாடலுக்கு ஸ்டைலாக, தலையை தூக்கிவிட்டபடி, அவர் நடந்து வருவது போன்ற வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இதை ரசிகர்கள் தாராளமாக லைக் செய்திருந்தனர். சிலர் கிண்டலடித்திருந்தனர்.
முதலும் முடிவும்
இந்நிலையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் 'வின்னர்' படத்தின் பாடல் காட்சியை மீண்டும் பதிவிட்டுள்ள கிரண், நான் அணிந்த முதலும் முடிவுமான பிகினி காட்சி இதுதான்' என்று கூறியுள்ளார். 'இந்த பாடல் காட்சிக்காக, டூ பீஸ் உடை அணிய சொல்லி, 6 மாதம் படக்குழு என்னை சமாதானப்படுத்தியது. ஆனால் அதை அணியும் முன் எனக்குள் பல கேள்விகள்.

பிகினி உடை
அதை அணிவதில் சிக்கல் இல்லை. ஆனால், பயமாக இருந்தது. படப்பிடிப்பின்போது எனது உடல் எடையும் ஒரு காரணம். ஆனால், படமும் பாடலும் ஹிட். இதுபோன்ற காட்சிகளால் ரசிகர்கள் சிலரை நான் ஏமாற்றினேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் எல்லாம் நல்லபடியாகவே முடிந்தது. உண்மையில் பிகினி உடையை மீண்டும் அணிவேன் மிகச்சரியான கோடை உடலுடன்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











