எனக்கும், வனிதாவுக்கும் திருமணம் ஆவதெல்லாம் ஆண்டவன் கையில்தான் உள்ளது.. ஓபனா பேசிய பவர் ஸ்டார்!

சென்னை: தனக்கும் வனிதாவுக்கும் திருமணம் நடப்பதெல்லாம் ஆண்டவன் கையில்தான் உள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார் சினிமாவில் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அனல்காற்று, அந்தகன், 2கே அழகானது காதல், சிவப்பு மனிதர்கள், வாசுவின் கர்ப்பிணிகள், கொடூரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

திருமண கோலத்தில்

திருமண கோலத்தில்

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் பவர் ஸ்டாருடன் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் போட்டோவை வனிதா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்தார். அந்த போட்டோ பெரும் வைரலானது.

வெளியான காரணம்

வெளியான காரணம்

பலரும் பவர் ஸ்டாருடன் திருமணம் ஆகிவிட்டதா என கமெண்ட் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் அந்த போட்டோவுக்கு பின்னணியில் உள்ள காரணம் தெரிந்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு


அதாவது நடிகை வனிதா பவர் ஸ்டாருடன் இணைந்து பிக்கப் ட்ராப் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய வனிதா 4 இல்ல 40 கல்யாணம் கூட பண்ணுவேன் அது என் விருப்பம் என்றார்.

திருமணம் செய்வேன்

திருமணம் செய்வேன்

மேலும் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை. நிச்சயமாக சாமியார் ஆக மாட்டேன். ஜோசியர் சொல்லியிருக்கிறார். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று பதில் அளித்தார்.

கல்யாணம் ஆவது கடவுள் கையில்

கல்யாணம் ஆவது கடவுள் கையில்

அவரை தொடர்ந்து பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், ஒரு போஸ்டர் வைரலாக பரவியிருக்கிறது. சம்பளமே வாங்காமல் இதில் நடித்து வருகிறேன். கல்யாணம் ஆவதெல்லாம் கடவுள் கையில்தான் உள்ளது. எனக்கும், வனிதாவுக்கும் திருமணம் ஆவதும் ஆண்டவன் கையில்தான் உள்ளது.

வாழ்த்து உண்மையானால் மகிழ்ச்சி

வாழ்த்து உண்மையானால் மகிழ்ச்சி

நடிகர் - நடிகை என்ற முறையில் தான் அந்த புகைப்படம் வெளியிடப்பட்டது. பலரின் வாழ்த்து உண்மையானால், அது மகிழ்ச்சியே. எனது லத்திகா படம் 350 நாட்கள் ஓடியது. அதுபோல், இந்த படத்தையும் 300 நாள் ஓடவைப்போம்.. இவ்வாறு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசினார்.

இவர் இப்படி சொல்கிறாரே

இவர் இப்படி சொல்கிறாரே

இதனைக் கேட்ட ரசிகர்கள், ஏற்கனவே எஸ் என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் உள்ளவரை வனிதா திருமணம் செய்வார் என ஜோசியர் கூறியதாக ஒரு தகவல் பரவிய நிலையில் சீனிவாசன் இப்படி சொல்கிறாரே என கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X