விஜய் சேதுபதியின் லுக் ரிலீஸ் ஆனதால் மாஸ்டர் டீம் அப்செட்... உதவி இயக்குனர்களுக்கு திடீர் தடை

By

Recommended Video

Master hidden Secrets | Soorarai pottru Unknown | Surya | Thalapathy Vijay

சென்னை: மாஸ்டர் படத்தில், விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனதால் அப்செட் ஆன படக்குழு, அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஷிவமோகா

ஷிவமோகா

இந்தப் படத்தின் ஷூட்டிங், கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் நடந்து வந்தது. அங்கு விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

விஜய் சேதுபதி லுக்

விஜய் சேதுபதி லுக்

அதை ரசிகர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டார். லாங் ஷாட்டில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், விஜய்சேதுபதியின் லுக் வெளியாகியுள்ளது.

படக்குழு அதிர்ச்சி

படக்குழு அதிர்ச்சி

இந்த வீடியோ வைரலானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. பொங்கலுக்கு, விஜய் சேதுபதியின் லுக்கை வெளியே விட முடிவு செய்திருந்தனர். அதற்குள் அந்த லுக் வெளியானதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செல்போனுக்கு தடை

செல்போனுக்கு தடை

இதையடுத்து படப்பிடிப்புத் தளத்துக்குள் உதவி இயக்குனர்கள் உள்ளிட்டவர்கள் யாரும், இனி செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்று படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. கர்நாடக ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை வந்துள்ள மாஸ்டர் டீம், அடுத்தக் கட்டப் படப்பிடிப்பை பொங்கலுக்குப் பின் தொடங்க இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X