“தி மாயன்“ கம்பீரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இன்று வெளியானது!
சென்னை : "தி மாயன்" படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியானது.
தி மாயன் அறிமுக இயக்குனர் ஜெ.ராஜேஷ் கண்ணன் இயக்கத்தில் வினோத் நாயகனாக நடிக்கும் திகில் மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை 'பாக்ஸ் கிரௌ ஸ்டுடியோஸ்' மற்றும் 'ஜி.கே.வி.எம் எலிபாண்ட் பிக்சர்ஸ்' நிறுவனமும் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் எம்.எஸ். ஜான்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். இத்திரைப்படம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் உருவாகிறது. மேலும் இத்திரைப்படத்தின் ஆங்கில பதிப்பில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வையை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து வெளியிட்டுள்ளனர். இப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் நேரடியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவில் இருந்து எடுக்கப்படும் முதல் கமர்ஷியல் ஆங்கில படமாகும்.

இப்படத்தை, தயாரித்து இயக்கியுள்ளார் ஜெ.ராஜேஷ் கண்ணா. இவர் சன் தொலைக்காட்சியில் நடிகர் விஷாலை வைத்து நாம் ஒருவர் என்னும் நிகழ்ச்சியை இயக்கினார். இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்று பரப்பாக பேசப்பட்டது. வினோத் மோகன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கேங் லீடர் என்னும் தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளனர். இதுவே அவருக்கு முதல் படமாகும். ஜி.வி பிரகாஷ் தமிழில் தயாரிக்கப்பட்ட மாயன் படத்திற்கு ஒரு பாடலை பாடி இருக்கிறார். சிம்பு மற்றும் அருண்ராஜா காமராஜுரும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications











