என் தலைவனை பார்த்துட்டேன்டா மொமெண்ட்.. துல்கர் சல்மானை கட்டி பிடித்து கதறிய ரசிகர்!
சென்னை: நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சீதா ராமம்.
இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
சமீபத்தில் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர் செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

கொண்டாடும் ரசிகர்கள்
ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் போன்ற பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் சீதா ராமம். இந்தியா பாகிஸ்தான் பிரச்சினைக்கு இடையே ராம் சீதாவின் காதல் ராம் செய்த தியாகம், இவர்களைத் தேடி அலையும் ராஷ்மிகா என்று ஒட்டுமொத்த காதல் காவியமாக வெளிவந்து இருக்கிறது சீதா ராமம். இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சீரியல் நாயகி
ஹிந்தியில் பல தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் இந்த படத்தில் நாயகியாக கலக்கியுள்ளார். துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் காம்போ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 20 வருடத்திற்கு முன்பு எழுதிய ஒரு கடிதத்தை எடுத்துக்கொண்டு அட்ரஸ் தெரியாத சீதா ராமை தேடி அலைகிறார் ராஷ்மிகா. கடைசியில் கடிதத்தை சேர்த்தாரா இல்லையா என்பது தான் படத்தின் ஆழமான கதை.

காதலும் ராணுவமும்
ராணுவத்தில் வேலை செய்யும் துல்கர் சல்மான், அவரை காதலிக்கும் நாயகி என்று ஒரு காதல் காவியமாக மட்டும் இல்லாமல் தேசப்பற்று நிறைந்த படமாகவும் சீதாராமம் இருக்கின்றது. 20 வருடங்களுக்கு முன்பு ஒரு குழந்தையை காப்பாற்றும் துல்கர் சல்மான், எதிரிகளிடம் சிக்கிக் கொள்ள பிறகு என்ன நடக்கின்றது என்பதை சீதா ராமம் திரைப்படம் குழப்பமில்லாத கதையாக மனதி வெல்கிறது.

கட்டி அணைத்த ரசிகர்கள்
சமீபத்தில் துல்கர் சல்மானின் ரசிகர் ஒருவர் இப்படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்து கொண்டு துல்கர் சல்மானை கட்டி அணைத்து அழுத வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. பிடித்த நடிகரை நேரத்தில் பார்த்தால் எப்படி எமோஷனல் ஆவார்களோ, அதே போல் இந்த படத்தை பார்த்த ரசிகர் துல்கர் சல்மானை கட்டி அணிந்துள்ளார். நடிகர் துல்கர் சல்மானும் அவரை கட்டி பிடித்து ஆறுதல் கூறுகிறார்.இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாக்களில் பரவுகின்றது.


Click it and Unblock the Notifications











