நடிகர் ரகுமானுக்காக காத்திருந்த முதல்வர் ஸ்டாலின்... தனது பண்பை வெளிப்படுத்தி வாழ்த்திய தருணம்

சென்னை: சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ரகுமான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அவருடைய கதாபாத்திரத்தை வைத்துதான் நந்தினியும் பெரிய பழுவேட்டரையரும் அருண் மொழி வர்மனுக்கு எதிராக திட்டம் தீட்டுவார்கள்.

இந்நிலையில் நடிகர் ரகுமான் இந்தப் படம் குறித்து கொடுத்துள்ள பேட்டியில் முதல்வர் ஸ்டாலின் அவர்களைப் பற்றி பெருமையாக பேசியுள்ளார்.

சங்கமம்

சங்கமம்

தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் போன்ற திரைப்படங்களின் வரிசையில் 90-களில் எடுக்கப்பட்ட படம்தான் சங்கமம். தன்னுடைய உறவினர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் தன் படத்திற்கு இசையமைக்குமாறு கேட்பதற்கு நடிகர் ரகுமான் சென்றுள்ளார். அப்போது சங்கமம் திரைப்படத்தின் கதையை ரகுமானிடம் கூறி அதில் நடிக்க ஏ.ஆர்.ரகுமான்தான் ஆலோசனை கூறினாராம். ரகுமான் முதலில் தயக்கம் காட்டியதால், சவாலாக எடுத்துக் கொண்டு நடியுங்கள், இசை ரீதியாக நானும் இந்தப் படத்தை சவாலாக எடுத்துக் கொண்டுதான் பணியாற்றுகிறேன் என்று கூறி ஊக்கமளித்தாராம்.

கலைஞர் குடும்பம் பாராட்டு

கலைஞர் குடும்பம் பாராட்டு

வணிக ரீதியாக அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடையாவிட்டாலும் அதன் இசையும் அதில் நடித்த நடிகர்களும் பாராட்டுக்களை பெற்றனர். புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்திற்குp பிறகு நடிகர் ரகுமானுக்கு சங்கமம் திரைப்படம் ஒரு முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளிவந்தபோது முதல்வராக இருந்த கலைஞர் மற்றும் அவரது குடும்பத்திற்கு சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்களாம். படம் பார்த்த பின்னர் கலைஞரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ரஹ்மானுக்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை கூறினார்களாம்.

ரகுமான் வீட்டு நிகழ்வு

ரகுமான் வீட்டு நிகழ்வு

சமீபத்தில் நடிகர் ரகுமானின் மகளுக்கு திருமணம் நடந்தது. அதற்காக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு முறையாக மரியாதை செலுத்தி பத்திரிக்கை வைத்திருந்தாராம். ஆனால் திருமணத்தன்று ஊட்டியில் ஒரு ஹெலிகாப்டர் கிராஷ் நடந்திருந்தால் அதனை மேற்பார்வையிட முதல்வர் ஸ்டாலின் அங்கு சென்று விட்டாராம். இதனால் திருமணத்திற்கு வர மாட்டார் என்று ரகுமான் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அன்றே விமானத்தில் சென்னைக்கு வந்தாராம் முதல்வர்.

முதல்வரின் பண்பு

முதல்வரின் பண்பு

மாலை திருமண வரவேற்பில் அவர் கலந்து கொள்ள மண்டபத்திற்க்கு வந்தபோது தான் தனது பெண்ணை அழைத்துக் கொண்டு மேடைக்கு சென்று கொண்டிருந்ததால் பெண்ணை மேடையில் ஏற்றிவிட்டு அந்த சடங்கை முடித்துவிட்டு வருகிறேன் என்று முதல்வரின் செக்கரட்ரியிடம் கூற, அதனை தூரத்திலிருந்து கவனித்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடிகர் ரகுமானை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தன்னுடைய செக்ரட்டரியை அழைத்தது மட்டுமில்லாமல் 10 நிமிடங்கள் அந்த சடங்குகள் முடியும்வரை காத்திருந்து பின் மணமக்களை வாழ்த்திய பண்பாளர் என நடிகர் ரகுமான் முதல்வரை பற்றி பெருமையாக கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X