இரண்டாம் முறையாக டொராண்டோ பிரீமியர் ஷோவில் கலந்து கொண்ட மூத்தன் - நிவின்பாலி உற்சாகம்
திருவனந்தபுரம்: கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த மூத்தன் திரைப்படம் டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பிரீமியர் காட்சியில் திரையிடப்பட்டது. ஜல்லிக்கட்டு மலையாள திரைப்படத்திற்கு பிறகு இந்த ஆண்டு டிஐஎஃப்எஃப்பில் (TIFF) திரையிடப்பட்ட இரண்டாவது மலையாள படம் மூத்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 11ஆம் தேதியன்று மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலியின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி இருக்கும் மூத்தன் திரைப்படத்தின் பிரீமியர் காட்சி டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (Toronto International Film Festival) வெளியிட்டது.

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு மலையாள திரைப்படத்திற்கு பிறகு, இந்த ஆண்டு டிஐஎஃப்எஃப்பில் (TIFF) திரையிடப்பட்ட இரண்டாவது மலையாள படம் மூத்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்பட விழாவில் மூத்தன் படத்தின் நடிகர்கள் நிவின் பாலி, சோபிதா துலிபாலா, மெலிசா ராஜு தாமஸ், ஷஷாங்க் அரோரா, ரோஷன் மேத்யு உள்ளிட்டோர் பிரீமியரில் கலந்து கொண்டனர்.
இப்படத்தை டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடுவது மூலம் எனது கனவு நனவாகும் என்று அந்த பிரீமியர் காட்சிக்கு முன்னதாகவே தெரிவித்திருந்தார் நிவின் பாலி. அவர் சொன்னது இப்பொழுது நிறைவேறியுள்ளது.
இப்படத்தை இந்த விழாவின் மூலம் பரந்து விரிந்த பார்வையாளர்களுக்கு கொண்டு செல்ல முடியும். இது மிகவும் நேர்மையான படம். இதற்காக நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்து இருக்கிறோம்.
கீது மோகன்தாஸின் முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டும். அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பு குழு மற்றும் ராஜிவ் ரவியின் தொழில்நுட்ப குழுவின் இந்த படைப்பு நிச்சயம் உலக அளவில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் என்கின்றனர் படக்குழுவினர்.
கீது மோகன்தாஸ் எழுதி இயக்கியுள்ள இப்படம் லட்சத்தீவை சேர்ந்த இரு சகோதரர்களை பற்றின கதை. மூத்த சகோதரரான அக்பர் மும்பை நகரத்திற்கு செல்கிறார். அக்பரை தொடர்ந்து அவரது 14 வயது சகோதரன் முல்லாவும் மும்பைக்கு தன் அண்ணனை தேடி செல்கிறார்.

முல்லாவிடம் ஒரு தொலைபேசி எண் மட்டுமே உள்ளது. அதை வைத்து அந்த சலசலப்பான நகரில் எப்படி தன்னுடைய சகோதரனை தேடுகிறார் என்பது தான் மூத்தன் படத்தின் கதைச்சுருக்கம்.
இப்படம் நிச்சயம் உலகளவில் பாராட்டு பெறும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர் மூத்தன் பட குழுவினர்.


Click it and Unblock the Notifications











