twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யானைகளுடன் மோதும் கொசு.. சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யா படத்துடன் மோதும் தி மஸ்கிட்டோ பிலாசபி!

    |

    சென்னை: 18வது சர்வதேச திரைப்பட விழா நாளை (பிப்ரவரி 18) சென்னையில் கோலாகலமாக துவங்குகிறது.

    வரும் 25ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் சர்வதேச நாடுகளின் படங்களுடன் தமிழ் சினிமா திரைப்படங்களும் திரையிடப்படவுள்ளது.

    அதிரடியாக தயாராகும் தூம் 4... வில்லனுக்கு பதில் வில்லியா...அதுவும் இவரா? அதிரடியாக தயாராகும் தூம் 4... வில்லனுக்கு பதில் வில்லியா...அதுவும் இவரா?

    தமிழ் படங்களுக்கான போட்டியில் பெரிய பட்ஜெட் படமான சூரரைப் போற்று படத்துடன் சில ஆயிரங்களில் சில மணி நேரங்களில் உருவாக்கப்பட்ட தி மஸ்கிட்டோ பிலாசபி படமும் போட்டியிடுகிறது.

    18வது சர்வதேச திரைப்பட விழா

    18வது சர்வதேச திரைப்பட விழா

    சென்னையில் ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 18வது சர்வதேச திரைப்பட விழா நாளை முதல் வரும் பிப்., 25ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. பி.வி.ஆர் சினிமாஸ் இந்த சர்வதேச திரைப்பட விழாவை ஒருங்கிணைத்து நடத்துகிறது. 53 நாடுகளில் இருந்து 37 மொழிகளில் உருவான (10 இந்திய மொழிகள்) 92 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

    வரப்பிரசாதம்

    வரப்பிரசாதம்

    ஒடிடி தளங்களில் கூட கிடைக்காத அரிய திரைப்படங்கள் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும். சினிமா கலையை பயிலும் மாணவர்களுக்கு உலகதர சினிமாக்களை காணும் அற்புதமான வாய்ப்பு இது. சத்யம் சினிமாஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பிவிஆர் மல்டிபிளக்ஸில் இந்த படங்கள் திரையிடப்படும்.

    கணவன் மனைவி போட்டி

    கணவன் மனைவி போட்டி

    தமிழில் இருந்து 13 திரைப்படங்கள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன. அதில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான பொன் மகள் வந்தாள் படங்கள் போட்டியில் உள்ளன. முதன்முறையாக சூர்யாவின் படமும் ஜோதிகாவின் படமும் இப்படியொரு சர்வதேச பட விழாவில் போட்டி போடுகின்றன.

    13 தமிழ்ப்படங்கள்

    13 தமிழ்ப்படங்கள்

    சிறந்த தமிழ்ப்படத்துக்கான போட்டியில், லேபர், கல்தா, சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், மழையில் நனைகிறேன், மை நேம் இஸ் ஆனந்தன், காட்ஃபாதர், தி மஸ்கிட்டோ பிலாசபி, சீயான்கள், சம் டே, காளிதாஸ், க/பெ ரணசிங்கம் மற்றும் கன்னி மாடம் என மொத்தம் 13 தமிழ்ப்படங்கள் போட்டியிடுகின்றன.

    சூர்யா படத்துடன் போட்டி

    சூர்யா படத்துடன் போட்டி

    ஏரோபிளேன் கதையை வைத்து பெரிய பட்ஜெட்டில் உருவான நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்துடன் வெறும் சில ஆயிரங்களில் நிஜ மனிதர்களை வைத்து லென்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் உருவாக்கிய நோ ரீ டேக் படமான தி மஸ்கிட்டோ பிலாசபியும் போட்டிப் போடும் நிலையில், அந்த படம் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வான 13 படங்களும் தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Small budget movie The Mosquito Philosophy compete with Suriya’s Soorarai Pottru in 18th Chennai Film Festival.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X