Actress Nalini: 365 நாளும் புதுசு தான்.. புடவைக்காக தனி வீடு வைத்திருக்கும் நளினி!
சென்னை: நடிகை நளினி புடவைக்காக தனி வீடே வைத்திருந்ததாக பேட்டி ஒன்றில் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து நடிகை நளினி. இவர் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனாலும் சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட, நளினி தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரையில் படு பிசியாக நடித்து வருகிறார்.

காதல் கடிதம்: இந்நிலையில்,நடிகை நளினி அண்மையில் அளித்துள்ள பேட்டியில் மனம் திறந்து பல விஷயங்களை பேசி இருந்தார். அதில்,நானும் ராமராஜனும் பல படங்களில் நடித்த போது காதலித்தோம். எங்கள் காதல் விவகாரம் என் குடும்பத்திற்கு தெரிந்து விட்டதால், அவருடன் சேர்ந்து படங்களில் நடிக்கவிடவில்லை. ஆனால், அவர் என்னுடைய உதவியாளருக்கு காசு கொடுத்து லவ் லெட்டர் கொடுத்து அனுப்புவார். அதை நான் ரகசியமாக எடுத்துச் சென்று படிப்பேன். இன்னும் அந்த கடிதத்தை பத்திரமாக வைத்து இருக்கிறேன்.
எம்.ஜி.ஆர் பிரச்சனையை தீர்த்தார்: மலையாள படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதுதான், புடவை மாற்றுவதாக சொல்லிவிட்டு, காரில் ஏறிச் சென்றுவிட்டேன். திருமணமானத்திற்கு பின் எங்கு செல்வது என்று தெரியாமல் ஊர் ஊராக சுற்றிக் கொண்டு இருந்தோம். அப்போது தான் எம்.ஜி.ஆர் அவர்கள் திருமணத்தில் தலையிட்டு பேசி பிரச்சனையை தீர்த்து வைத்தார்.
பிரிந்துவிட்டோம்: ஆனால், 2000ம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம். பிரிந்து தான் வாழ்கிறோமே தவிர நான் இன்னும் அவரை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இது அவருக்கும் தெரியும் என்று வெட்கப்பட்டுக்கொண்டே கூறினார்.
365 நாளும் புது புடவை: மேலும், புடவை கலேக்ஷன் குறித்த கேள்விக்கு பதில் அளித்த நளினி எனக்கு புடவை என்றால் ரொம்ப பிடிக்கும், இதனால், எப்போதுமே புது புது புடவை வாங்குவது என்னுடைய பழக்கமாகிவிட்டது. 365 நாளும் எனக்கு புது புடவை கட்ட வேண்டும். இதற்காக ஒரு வீட்டையே வெச்சி இருக்கிறேன். ஒரு முறை புடவையை கட்டிவிட்டு அந்த வீட்டில் போட்டு பூட்டி விடுவேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பெண்கள் என்னது புடவைக்குனு தனி வீடா என்று வாயை பிளந்தபடி கேட்டுவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











