அதிகம் ட்விட் செய்யப்பட்ட தென்னிந்திய திரைப்பிரபலங்கள்... மகேஷ் பாபு .. கீர்த்தி சுரேஷ் முதலிடம் !

சென்னை : உலக அளவில் பிரபலங்கள் பலரும் ட்விட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வர அதில் இந்தியாவைச் சேர்ந்த பெரும்பான்மையான திரைப்பிரபலங்கள் அதைத்தொடர்ந்து பயன்படுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் அவ்வப்போது நடிகர் நடிகைகள் பதிவிடும் பதிவுகள் ட்ரெண்டாகி இந்திய அளவில் மிகப் பெரிய பேசு பொருளாகவும் இருந்து வருகிறது.

அந்த வகையில் ட்விட்டர் இந்தியா இப்போது வெளியிட்டுள்ள பட்டியலின் அடிப்படையில் தென்னிந்திய அளவில் அதிகமாக ட்விட் செய்யப்பட்ட நடிகர் நடிகைகளின் பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளது.

உடனுக்குடன்

உடனுக்குடன்

சினிமாவைப் பற்றிய எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் முதலில் ட்விட்டர் சமூகவலைதளத்தைத் தாண்டிதான் அது வெளியாகும், அந்த அளவிற்கு, நொடிக்கு நொடி சினிமாவில் நடக்கின்ற அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் ட்விட்டர் பக்கத்தில் பிரபலங்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

அவர்களது பெயரும் முன்னணியில்

அவர்களது பெயரும் முன்னணியில்

இந்த நிலையில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகளின் ட்விட்டர் கணக்குகளை ஃபாலோ செய்வதோடு அவர்கள் பதிவிடும் பதிவுகளைத் தொடர்ந்து ட்ரெண்டாக்கி வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் பிரபலங்கள் வெளியிடும் புகைப்படங்கள், செய்திகள் என அனைத்தும் வைரலாகி வர ட்ரெண்டிங்கில் அவர்களது பெயரும் முன்னணியில் இருந்து வருகிறது.

மகேஷ் பாபு முதல் இடத்தில்

மகேஷ் பாபு முதல் இடத்தில்

இந்த நிலையில் ட்விட்டர் இந்தியா தென்னிந்தியாவில் அதிகமாக ட்விட் செய்யப்பட்ட திரைப்பிரபலங்களின் பெயர் பட்டியலை வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முதல் இடத்திலும், அவரைத் தொடர்ந்து பவன்கல்யாண் இரண்டாம் இடத்திலும், நடிகர் விஜய் மூன்றாம் இடத்திலும் இருந்து வர ஜூனியர் என்டிஆர், சூர்யா, அல்லு அர்ஜுன், ராம்சரண், தனுஷ், மோகன் லால், மற்றும் சிரஞ்சீவி என ட்விட்டர் இந்தியா டாப் 10 நடிகர்களின் பெயர் பட்டியலை வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது.

Recommended Video

Thalapathy Vijay Selfie ! ட்விட்டரில் மாஸ் காட்டிய விஜய்யின் Selfie
டாப் 10 நடிகைகள்

டாப் 10 நடிகைகள்

ஹீரோக்களை போலவே ஹீரோயின்களுக்கும் தனி பட்டியலை வெளியிட்டுள்ள ட்விட்டர் இந்தியா அதில் அதிகம் ட்விட் செய்யப்பட்ட தென்னிந்திய நடிகைளின் பெயர்கள் என்ற வரிசையில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதலிடத்தை பிடித்துள்ளார், இவரைத் தொடர்ந்து காஜல் அகர்வால் இரண்டாம் இடத்திலும், சமந்தா மூன்றாம் இடத்திலும் இருந்து வர ரஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, டாப்ஸி பண்ணு, தமன்னா, ரகுல் ப்ரீத் சிங், ஸ்ருதிஹாசன் மற்றும் பத்தாவது இடத்தில் திரிஷா என டாப் 10 நடிகைகளின் பெயர் பட்டியலையும் ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளதை அடுத்து இவை ட்ரெண்ட்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X