அவன் ரொம்ப கொடூரமானவன்.. கேஜிஎஃப் இயக்குநர் இயக்கத்தில் மிரட்டப் போகும் பிரபாஸ்! #SALAAR

சென்னை: கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

பாகுபலி, சாஹோ, ராதேஷ்யாம், நடிகையர் திலகம் இயக்குநருடன் பிரம்மாண்ட படம் என சர்வதேச அளவில் பிரபாஸின் மார்க்கெட் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கேஜிஎஃப் பட இயக்குநருடன் பிரபாஸ் இணைந்து மிரட்டப் போகும் படத்திற்கு சலார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனம்

கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனம்

இந்தியளவில் 'கே.ஜி.எஃப்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போது 'யுவரத்னா' மற்றும் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' ஆகிய படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது.

டார்லிங் பிரபாஸ்

டார்லிங் பிரபாஸ்

ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் தங்களது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அறிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான 'டார்லிங்' பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை 'கே.ஜி.எஃப்' படங்களின் மூலம் நம்மை அசரவைத்த இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்த படம் தயாராகவுள்ளது.

பிரம்மாண்ட மிரட்டல்

பிரம்மாண்ட மிரட்டல்

தற்போது 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' பணிகளில் இருக்கும் பிரஷாந்த் நீல், அதை முடித்துவிட்டு பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார். இந்தப் பிரம்மாண்ட தயாரிப்பு குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகண்தூர் கூறுகையில் "ஆம்! அது உண்மைதான்!! 'டார்லிங்' பிரபாஸ் மற்றும் பிரஷாந்த் நீல் இருவரையும் இந்த மிகப்பெரிய படத்தில் இணைப்பதில் மிகுந்து மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

இந்திய மொழிகளில்

இந்திய மொழிகளில்

ஹொம்பாளே பிலிம்ஸ் தங்கள் முதல் படத்தில் இருந்தே சினிமாத் துறையில் புதிய ட்ரெண்ட்டை உருவாக்கி வருகிறது. ''சலார் ' படத்தை நாடு முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக உருவாக்க எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளை மேற்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

வெறித்தன வெயிட்டிங்

வெறித்தன வெயிட்டிங்

இந்தப் படத்தயாரிப்பின் மூலம் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது ஹொம்பாளே பிலிம்ஸ். இதுவரை இந்தியத் திரையுலகில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும், 2 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிட்டதில்லை. 'கே.ஜி.எஃப் சேப்டர் 1', 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' ஆகிய படங்களைத் தொடர்ந்து பிரபாஸ் - பிரஷாந்த் நீல் படத்தையும் அனைத்து மொழிகளிலும் வெளியிட ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்திய அளவில் அடுத்ததொரு பிரம்மாண்ட படைப்பு ரசிகர்களின் விருந்துக்காகத் தயாராகவுள்ளது

300 கோடி நாயகன்

300 கோடி நாயகன்

பாகுபலி படத்திற்கு பிறகு 300 கோடி நாயகனாக மாறிவிட்டார் பிரபாஸ். படத்தின் வசூல் இல்லைங்க, படத்தின் பட்ஜெட்டே 300 கோடிக்கு மேல் தான். சாஹோ, ராதே ஷ்யாம், நடிகையர் திலகம் இயக்குநருடன் பிரம்மாண்ட படம், ஆதிபுருஷ் என பாலிவுட் ஹீரோக்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு அடுத்த லெவலுக்கு முன்னேறி விட்டார் பிரபாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X