குத்த வச்சு உட்கார்ந்து இருக்கும் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்.. சாணிக் காயிதம் போஸ்டர் மிரட்டுது!

சென்னை: இயக்குநர் செல்வராகவன் முதன் முறையாக நடிகராக அவதாரமெடுத்துள்ள சாணிக் காயிதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிரட்டி வருகிறது.

இந்த படத்தில் செல்வராகவன் உடன் தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

நடிகர் அவதாரம்

நடிகர் அவதாரம்

துள்ளுவதோ இளமை படத்தில் கதாசிரியராக ஆரம்பித்த பயணம், காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தி ஒருவன், என்.ஜி.கே என இயக்கத்தில் மிரட்டி வந்த செல்வராகவன், தற்போது முதன்முறையாக நடிகராக அவதாரமெடுத்துள்ள படம் சாணிக் காயிதம்.

தேசிய விருது நடிகை

தேசிய விருது நடிகை

இயக்குநர் செல்வராகவனுடன் இந்த படத்தில் தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து மிரட்ட உள்ளார். லாக்டவுன் காரணமாக தொடர்ந்து ஒடிடியில் வெளியான கீர்த்தி சுரேஷின், பெண்குயின், மிஸ் இந்தியா படங்கள் சொதப்பிய நிலையில், கீர்த்தி சுரேஷுக்கு இந்த படம் ஒரு நல்ல கம்பேக் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் யார்

இயக்குநர் யார்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று மிகப்பெரிய பாராட்டுக்களுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. சுதா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய அருண் மாதேஸ்வரன் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். 80களில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு சாணிக் காயிதம் உருவாகி வருகிறதாம்.

மிரட்டல் போஸ்டர்

சாணிக் காயிதம் படம் பற்றிய அறிமுக போஸ்டரில் செல்வராகவன் கையில் கத்தியும், கீர்த்தி சுரேஷ் கையில் துப்பாக்கியும் இருந்தன. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள மிரட்டல் போஸ்டரில், இருவரும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டு, குத்த வச்சு உட்கார்ந்து இருப்பது போல இருக்கும் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தனுஷ் ரிலீஸ்

தனுஷ் ரிலீஸ்

தன்னை நடிகனாக்கி அழகு பார்த்த அண்ணன் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஏற்கனவே உருவாகி உள்ள ராக்கி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X