‘பப்பாளி’ அம்மா சரண்யாவுக்கு ‘மாமியார்’ புரமோஷன்...!

சென்னை: எஸ். அம்பேத்குமார் - எ.ரஞ்ஜீவ்மேனன் இருவரும் இணைந்து அரசூர் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக தயாரித்திருக்கும் படம் ''பப்பாளி'. இந்த படத்தில் 'சரவணன் மீனாட்சி' புகழ் செந்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக இஷாரா நடித்திருக்கிறார்.

முக்கிய வேடத்தில் சரண்யா, இளவரசு , ஆடுகளம் நரேன் , சிங்கம் புலி , ஜெகன் ,கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர கௌரவ வேடத்தில் நிரோஷா நடித்துள்ளார்.

இப்படத்திற்கு கதை ,திரைக்கதை ,வசனம் எழுதி இயக்குகிறார் எ.கோவிந்தமூர்த்தி. தனது பப்பாளி படம் மூலம் இது வரை அம்மா கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சரண்யா, இனி நல்ல மாமியாராகவும் அடையாளம் காணப்படுவார் என கோவிந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது :-

நல்ல மாமியார்...

நல்ல மாமியார்...

மாமியார் என்றாலே கொடுமைக்காரியாக சித்தரிக்கப் பட்ட சினிமாக்களுக்கு மத்தியில் மாமியாரை நல்லவர்களாக எங்கள் படத்தில் சித்தரித்திருக்கிறோம்.

மாமியாராக சரண்யா...

மாமியாராக சரண்யா...

இப்படத்தில் மாமியராக சரண்யா நடித்துள்ளார். இனிமேல் நல்ல அம்மா மட்டுமல்ல..நல்ல மாமியார் என்றும் சரண்யா பாராட்டப் படுவார்.

கல்வியின் முக்கியத்துவம்...

கல்வியின் முக்கியத்துவம்...

படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதும், எடுத்துக்கு கொள்கிற லட்சியத்தை அடைய எந்த தடைக் கற்களையும் தாண்டிப் போக வேண்டும் என்கிற கருத்தையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறோம்.

நகைச்சுவைப் படம்...

நகைச்சுவைப் படம்...

நல்ல கருத்தை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து உருவாக்கி இருக்கிறோம். நிச்சயம் ரசிக்கும் படியான படமாக " பப்பாளி " இருக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

11ம் தேதி ரிலீஸ்...

11ம் தேதி ரிலீஸ்...

இப்படம் வரும் 11 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, இசை விஜய் எபினேசர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X