பிரபாஸின் ஆதிபுருஷ் டீசர் வெளியானது… அயோத்தியில் நடந்த பிரம்மாண்ட விழா…
அயோத்தி: பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.
பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவுத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தின் டீசர் இன்று அயோத்தியில் இருந்து வெளியிடப்பட்டது.

ராமராக பிரபாஸ்
ராதே ஷ்யாம் படத்தைத் தொடர்ந்து 'கேஜிஎஃப்' புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்', நாக் அஸ்வின் இயக்கும் 'ப்ராஜக்ட் கே' படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இதனிடையே ஓம் ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் படத்திலும் நடித்து முடித்துள்ளார். 'ஆதிபுருஷ்' 2023ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. செப்டம்பர் 30ம் தேதி ஆதிபுருஷ் படத்தில் இருந்து பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு ரிலீஸ் செய்திருந்தது.

அயோத்தியில் டீசர் ரிலீஸ்
3டி ப்ளஸ் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் ராமாயணத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் ராமராகவும் கிருத்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். அதேபோல் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ராவணன் கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தின் டீசரை படக்குழுவினர் அயோத்தியில் இருந்து வெளியிட்டுள்ளனர். இதற்காக பிரபாஸ், கிருத்தி சனோன், இயக்குநர் ஓம் ராவத் ஆகியோர் ஏற்கனவே அயோத்தி சென்றிருந்தனர்.

5 மொழிகளில் ஆதிபுருஷ்
அயோத்தியில் உள்ள சரயு நதியோரம் சுமார் 10 ஆயிரம் பேர் முன்னிலையில் ஆதிபுருஷ் டீசர் வெளியியிடப்பட்டுள்ளது. இதற்காக அங்கே 250 போலீசார்களும், 200 பவுன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 50 அடியில் ஆதிபுருஷ் படத்தின் போஸ்டரையும் பேனராக வைத்துள்ளது படக்குழு. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசருக்கு, பிரபாஸ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு நிமிடம் 46 நொடிகள் ஓடும் இந்த டீசர் ஐந்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

ஆதிபுருஷ் கை கொடுக்குமா?
தெலுங்கு ரசிகர்களால் டார்லிங் என கொண்டாடப்படும் பிரபாஸ், பாகுபலி திரைப்படம் பான் இந்தியா ஸ்டாராக விஸ்வரூபமெடுத்தார். ராஜமெளலியின் இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான பாகுபலி, இந்தியத் திரையுலகையே மிரள வைத்தது. பிரபாஸின் கேரியரில் தரமான சம்பவம் செய்த பாகுபலியால், அவருக்கு அடுத்தடுத்து பான் இந்தியா படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. ஆனாலும், சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











