மம்மி வில்லனை நியாபகம் இருக்கா.. விஜய் தேவரகொண்டாவுடன் சண்டை போட இந்தியாவுக்கே வந்துட்டாரு!
ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டாவும் இயக்குநர் ராகுல் சங்க்ரித்யானும் இணைந்து உருவாக்கி வரும் VD14 திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 19ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவை பின்னணியாகக் கொண்ட இந்த பிரம்மாண்ட அதிரடி-வரலாற்று படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக ஒரு பேச்சு போய்க்கொண்டு உள்ளது. மிக முக்கியமாக, ஹாலிவுட் லெஜண்ட் அர்னால்ட் வோஸ்லூ (Arnold Vosloo - The Mummy படத்தில் வில்லனாக நடித்தவர்) இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று நீண்ட நாட்களாக வதந்தி அடிபட்டு வந்த நிலையில், இப்போது அவர் செட்டில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, அவர் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளது. இந்த படம் இந்திய சினிமாவின் அடுத்த பெரிய பான்-இந்தியா முயற்சியாக உருவாகி வருகிறது.
ரவுடி பாய் என்று அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் ராகுல் சங்க்ரித்யன் என்பவருடன் இணைந்து ஒரு புதிய படத்தை உருவாக்கி வருவது தெரிந்ததே. தற்போது இந்தப் படம் 'VD 14' என்ற தற்காலிகப் பெயரில் இந்திய அளவில் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் நவீன் மற்றும் ரவிசங்கர் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில், ஸ்டார் நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றுகிறார்கள். 'டேக்ஸிவாலா' படத்தின் வெற்றிக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். 'VD 14' படம் 1854-1878 காலகட்டத்தில் அமைந்த பிரிட்டிஷ் கால பின்னணியில், The Legend of the Cursed Land என்ற கதையை சொல்லும் சூப்பர் நேச்சுரல் ஹாரர்-ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வருகிறது.

விஜய் தேவரகொண்டா: இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக படத்தின் ப்ரீ புரெடக்ஷன் பணிகளில் ஈடுபட்ட ராகுல் சங்க்ரித்யன், அமைதியாகப் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். சமீபத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது, அதில் விஜய் தேவரகொண்டாவின் பின்புறப் படம் - நீண்ட முடி, போர் காயங்களுடன் கோயில் போன்ற இடத்தில் தியானம் செய்யும் ரஸ்டிக் அவதாரத்தில் காட்டப்பட்டுள்ளது. இது விஜயின் மிகப்பெரிய மாற்றமான நடிப்பாக இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.மேலும், ரஷ்மிகா மந்தனா இதில் ஹீரோயினாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, அவர்கள் 'கீதா கோவிந்தம்' பிறகு மீண்டும் இணைகின்றனர். ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வோஸ்லூ பிரிட்டிஷ் அதிகாரியாக முக்கிய வில்லனாக நடிக்கிறார். சமீபத்திய தகவலின்படி, புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா இதில் இணைந்துள்ளார். இந்தப் படம் இந்தியாவின் "பேசப்படாத" ஆங்கிலேயர்களின் வரலாற்றை தத்ரூபமாக சித்தரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மம்மி வில்லன்: விஜய் தேவரகொண்டாவின் VD14 படத்தில், தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நட்சத்திரம் அர்னால்ட் வோஸ்லூ ஒரு முக்கியமான வில்லன் வேடத்தில் (பிரிட்டிஷ் அதிகாரி) நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஏற்கனவே படப்பிடிப்பில் இணைந்துள்ளார். நடிகர் வினோத் சாகருடன் அவர் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் படம் காலனிய காலகட்டத்தில் அமைந்துள்ளதால், அவரது வில்லன் வேடம் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications











