விஜய்யுடன் மிக நெருக்கமாக இருக்கும் அந்த பெண் யார் தெரியுமா?
Recommended Video

ஹைதாராபாத்: லீக்கான புகைப்படங்களில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக இருக்கும் பெண் யார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது.
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழகத்திலும் ஏகப்பட்ட ரசிகைகள் உள்ளனர். இந்நிலையில் விஜய் வெளிநாட்டு பெண் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.
புகைப்படங்களை பார்த்தவர்கள் அந்த பெண் யார் என்ற விபரத்தை தேடினார்கள்.

வெர்ஜினி
புகைப்படங்களில் விஜய் தேவரகொண்டாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் பெண்ணின் பெயர் வெர்ஜினி என்பது தெரிய வந்துள்ளது. பெல்ஜியத்தை சேர்ந்த அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். வந்த இடத்தில் விஜய்யை சந்தித்து காதலில் விழுந்துள்ளார். இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான பெல்லி சூப்புலு தெலுங்கு படத்தில் வெர்ஜினி சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். மேலும் ராணா நடத்திய நம்பர் ஒன் யாரி தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் வெர்ஜினி கலந்து கொண்டுள்ளார். அவர் பெல்ஜியத்திற்கு கிளம்பிச் செல்லும் முன்பு கடந்த ஆண்டு மட்டும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளாராம்.

காதல்
விஜய் தேவரகொண்டாவும், வெர்ஜினியும் காதலிப்பது இரு வீட்டாருக்கும் தெரியுமாம். அவர்களின் காதலுக்கு பெற்றோர் பச்சைக் கொடி காட்டிவிட்டார்களாம். வெர்ஜினி விஜய்க்கு மட்டும் அல்ல அவரின் பெற்றோருக்கும் பிடித்த பெண்ணாம். விஜய்யின் பெற்றோருடன் தான் இருக்கும் புகைப்படங்களை வெர்ஜினி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர்
வெர்ஜினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரும், விஜய்யும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை தான் டிஸ்பிளே பிக்சராக வைத்துள்ளார். விஜய்யும், வெர்ஜினியும் காதலிப்பது தெலுங்கு திரையுலகில் பலருக்கும் தெரியும் என்று கூறப்படுகிறது. இருவரும் சீரியஸாக இருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூட கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து விஜய் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











