twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏ.ஆர். ரஹ்மான் என்பது என் பெயர் இல்லை.. கனடா தெருவுக்கு பெயர் வைத்த நிலையில் இசைப்புயல் நெகிழ்ச்சி!

    |

    சென்னை: கனடா நாட்டின் மர்காம் நகரில் உள்ள தெருவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

    அந்த அறிவிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் என்பது தனது பெயர் இல்லை என்றும் அதற்கான உண்மையான அர்த்தத்தையும் ரஹ்மான் கூறியுள்ளார்.

    விக்ரமின் ’கோப்ரா’ படம்.. இணையதளங்களில் வெளியிட தடை.. உயர் நீதிமன்றம் உத்தரவுவிக்ரமின் ’கோப்ரா’ படம்.. இணையதளங்களில் வெளியிட தடை.. உயர் நீதிமன்றம் உத்தரவு

    நிஜப் பெயர்

    நிஜப் பெயர்

    திலீப் குமார் என்கிற தனது பெயரை அல்லா ரக்கா ரஹ்மான் (சுருக்கமாக) ஏ.ஆர். ரஹ்மான் என மாற்றிக் கொண்டார். ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தனது இசையால் ஒட்டுமொத்த உலகத்தையும் கட்டிப் போட்டு ஏகப்பட்ட சர்வதேச ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

    தெருவுக்குப் பெயர்

    தெருவுக்குப் பெயர்

    கனடா நாட்டின் மர்காம் நகரில் உள்ள தெருவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களையும் அங்கே நடைபெற்ற நிகழ்ச்சியில் மர்காம் மேயர் உள்ளிட்ட பலரும் ஏ.ஆர். ரஹ்மானை கெளரவித்த போட்டோக்களையும் ஷேர் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.

    கனடாவில் அங்கீகாரம்

    கனடாவில் அங்கீகாரம்

    ஆஸ்கர் மேடையை அலங்கரித்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு 100 ஆண்டுகால சினிமாவை முன்னிட்டு கனடாவின் மர்காம் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அங்கே மக்கள் முன்னிலையில் ஏ.ஆர். ரஹ்மான் உரையாற்றிய புகைப்படத்தையும் மர்காம் மேயர் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

    ரஹ்மான் என் பெயரில்லை

    ரஹ்மான் என் பெயரில்லை

    இந்நிலையில், இது தொடர்பாக இன்னொரு நன்றிக் கடிதத்தையும் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அதில், ஏ.ஆர். ரஹ்மான் என்பது என்னுடைய பெயரில்லை. அந்த பெயருக்கு அர்த்தம் கருணை. கருணையின் கடவுள் கனடா மக்கள் வாழ்வை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றட்டும் என பதிவிட்டுள்ளார்.

    ஓய்வு எடுக்க விரும்பல

    ஓய்வு எடுக்க விரும்பல

    டையர்ட் ஆனாலும் ரிட்டயர் ஆக விரும்ப வில்லை என்றும் இதே போல பல பாலங்களை கடந்து இசையால் மக்களுடன் எப்போதும் இணைய வேண்டும் என்றும் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஏ.ஆர். ரஹ்மான் தனது நன்றி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் கனடாவின் நகரில் உள்ள தெருவுக்கு பெயர் வைத்திருப்பதற்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.

    English summary
    "The name AR Rahman is not mine" AR Rahman's heartfelt tweet after a street gets his name in Canada. The great composer also shares few more photos of his Canada tour.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X