வில்லன் நடிகரிடமே வில்லத்தனம் காட்டிய நேபாளி வேலைக்காரன்..200 சவரன் நகை கொள்ளையில் துப்பு துலங்கியது
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள நடிகர் ஆர்.கேவின் வீட்டில் 200 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் துப்பு துலங்கியது.
நடிகர் ஆர்.கே.வின் மனைவியை கத்தியை காட்டி மிரட்டி கட்டிபோட்டு 200 சவரன் நகை 3 லட்சம் பணம் கொள்ளை.
நேபாளி வேலைக்காரன் திட்டம் போட்டு கும்பலுடன் கொள்ளை நடத்தியது அம்பலம். தனிப்படை கொள்ளையர்களை தேடுகிறது.

சென்னையில் நீண்ட ஆண்டுகளுக்குப்பின் ஒரு சம்பவம்
சென்னையில் திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. ஆனால் இதுவரை சென்னையில் இல்லாத ஒரு சம்பவம் கொள்ளை கும்பல் வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணை கட்டிப்போட்டு நகைப் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றது நீண்ட ஆண்டுகளுக்கு பின் நடந்துள்ளது. வில்லன் நடிகருக்கே வில்லனாக மாறிய வேலைக்காரன் போட்ட திட்டத்தால் 200 பவுன் நகை, 3 லட்ச ரூபாய் பறிபோயுள்ளது. நேற்று நந்தம்பாக்கத்தில் கடும் மழை பெய்த நேரத்தில் நடிகர் ஆர்.கே.வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரது மனைவியை கட்டிப்போட்டு நகை பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

ஜில்லாவின் வில்லனுக்கே வில்லனாக வந்த நேபாளி வேலைக்காரன்
நந்தம்பாக்கத்தில் வசிப்பபவர் ஆர்.கே என்கிற ராதாகிருஷ்ணன். இவர் அழகர் மலை, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்தார். காந்தப்படுக்கை விவகாரத்தில் சிக்கிய இவர் மீது புகார்கள் உள்ளது. அதன்பின்னர் அவன் இவன் படத்தில் ஜமீந்தாரை கொல்லும் கொடூர வில்லனாக நடித்திருப்பார். ஜில்லா படத்திலும் விஜய், மோகன்லாலுக்கு வில்லனாக சில காட்சிகளில் வருவார். இவர் சென்னை நந்தம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த இவர் நேற்று வெளியே சென்றிருந்த நேரம் இவர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

கனமழையை பயன்படுத்திதிட்டம் போட்டு கொள்ளையடித்த கும்பல்
சென்னையில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதைப்பயன்படுத்தி நடிகர் ஆர்.கே வீட்டுக்குள் புகுந்த ஒரு கொள்ளை வீட்டுக்குள் பின் வாசல் வழியாக நுழைந்துள்ளது. வீட்டில் ஆர்.கேவின் மனைவி ராஜி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த கொள்ளை கும்பல் ஆர்.கே மனைவியை கத்தி முனையில் மிரட்டி 200 பவுன் நகை, 3 லட்ச ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளது. அந்த கும்பல் போகும்போது அவரை கட்டிப்போட்டுவிட்டு சென்றுள்ளது.

திட்டம் போட்டு நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்த நேபாளி
அதன்பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து ஆர்.கே.மனைவியை மீட்டுள்ளனர். கொள்ளைச் சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் வேலை செய்யும் நேபாளத்தைச் சேர்ந்த வேலைக்காரன் மாயமானது தெரிய வந்தது. அவரது போன் நெம்பரும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதால் சந்தேகப்பட்ட போலீஸார் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது வேலைக்காரன் திட்டம் அம்ப்பலப்பட்டது.

4 மாதத்துக்கு முன் வேலைக்கு சேர்ந்த நேபாளி வில்லனானார்
கடந்த நான்கு மாதத்துக்கு முன் வேலைக்கு நேபாளத்தை சேர்ந்த அந்த நபர் ஆர்கே வீட்டில் பண நடமாட்டம், நகை வைத்துள்ளது, பாதுகாப்பில்லாமல் மனைவி மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்டு தனது நண்பர்கள் நான்குபேருடன் சேர்ந்து நகை பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளனர். ஆர்.கே அடிக்கடி வெளியே செல்வதை திட்டமிட்டு நேற்றிரவு மழை பெய்ததை சாதகமாக்கிக்கொண்ட் வேலைக்காரன் வெளியில் சென்று வருவதாக ஆர்.கே. மனைவியிடம் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் பின் வாசல் கதவை தாழ்ப்பாள் போடாமல் திறந்து வைத்து விட்டுச் சென்றுள்ளார்.

5 தனிப்படை -நேபாள் தப்பிச் செல்வதை தடுக்க ஆந்திரா விரைந்தது தனிப்படை
திட்டமிட்டப்படி கொள்ளையர்கள் பின்வாசல் வழியாக உள்ளே வந்துள்ளனர். ஆர்கே மனைவி ராஜியிடம் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் உள்ள 200 பவுன் நகை, பணம் ரூ.3 லட்சத்தை எடுத்துக்கொண்டு அவரை கட்டிப்போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். வேலைக்காரன் போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது. அதை தீவிரமாக கண்காணித்து வரும் போலீஸார் கொள்ளையர்கள் நேபாளம் தப்பிச் சென்றுவிடாமல் இருக்க 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். அவர்கள் ஆந்திராவுக்கு சாலை மார்கமாக சென்று அங்கிருந்து ரயில் மூலம் கொல்கொத்தா சென்று நேபாள் தப்ப வாய்ப்புள்ளதாக போலீஸார் கருதி தனிப்படை ஆந்திரா சென்றுள்ளது.


Click it and Unblock the Notifications











